நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

நெகிரி செம்பிலான் மாநில DAP தலைவராக J.அருள் குமார் நியமனம் 

சிரம்பான்: 

நெகிரி செம்பிலான் மாநில DAP தலைவராக நீலாய் சட்டமன்ற உறுப்பினர் ஜெ. அருள் குமார் நியமிக்கப்பட்டுள்ளார் 

கடந்த ஆகஸ்ட் 3ஆம் தேதி மாநில தலைவராக இருந்த அந்தோனி லோக் தனது தலைவர் பதவியிலிருந்து ராஜினாமா செய்வதாக அறிவித்த நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. 

சென்னா சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்ட அந்தோனி லோக் தேசிய முன்னணியின் சியோவ் கொங் சூனிடம் 688 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார். 

நீலாய்யில் நடந்த ஐந்து முனை தேர்தலில் ஜெ. அருள்குமார் 15,797 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். 

ஆகஸ்ட் மாத தொடக்கத்தில் நடந்த நெகிரி செம்பிலான் மாநில தேர்தலில் DAP மோசமான அடைவுநிலையைப் பதிவு செய்தது 

இந்த தேர்தலில் BN - PN கூட்டணி இணைந்து தேர்தலில் 25 இடங்களை வெற்றிக்கொண்டு மாநில அரசாங்கத்தை அமைத்தது

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset