நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

சரவாக், சிலாங்கூர் மாநிலங்களில் உள்ள 10 பகுதிகளில் காற்றின் தரம் ஆரோக்கியமற்ற நிலையில் பதிவு 

பெட்டாலிங் ஜெயா: 

சரவாக், தீபகற்ப மலேசியாவில் உள்ள சிலாங்கூர் மாநிலங்களை உட்படுத்திய 10 பகுதிகளில் காற்றின் தரம் ஆரோக்கியமற்ற நிலையில் பதிவு செய்யப்பட்டது. 

சரவாக் மாநிலத்தின் செரியான், கூச்சிங், சமராஹான், சிபு, ஶ்ரீ அமான், முக்கா, சரிகெய், பிந்துலு ஆகிய பகுதிகளில் காற்றி தர குறியீடு 100ஐ தாண்டி பதிவு செய்தது 

சிலாங்கூர் மாநிலத்தில் ஜொஹான் செத்தியா பகுதியில் காற்றின் தர குறியீடு 154ஆக பதிவு செய்யப்பட்டது. இது ஆரோக்கியமற்ற நிலையைக் காட்டுகிறது. 

தீபகற்பம், சபா மற்றும் சரவாக்கில் மொத்தம் 55 பகுதிகள் மிதமான அளவில் இருந்தன, அதே நேரத்தில் கங்கர், லங்காவி மற்றும் ஜெரான்டுட் நல்ல API  அளவீடுகளைப் பதிவு செய்தன.

IPU வழிகாட்டுதலின் படி 51- 100 வரை காற்றின் தரம் ஆரோக்கியமானது என்றும் 101-200 வரை காற்றின் தரம் ஆரோக்கியமற்ற நிலையாகவும் 401-500 வரை மோசமாக அளவில் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset