நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மாரானில் பேருந்து- டிரெய்லர் மோதி பயங்கர சாலை விபத்து: நால்வர் காயம் 

மாரான்: 

மாரானில் தஹ்ஃபிஸ் மாணவர்களை ஏற்றி வந்து கொண்டிருந்த பேருந்து - டிரெய்லர் லாரியுடன் மோதி ஏற்பட்ட சாலை விபத்தில் நால்வர் லேசான காயங்களுக்கு இலக்காகினர். 

இந்த சாலை விபத்து மாரான், ஜாலான் பெசார் ஜெங்கா 18 எனும் பகுதியில் நிகழ்ந்தது 

வோல்வோ ரக டிரெய்லர் லாரியும் எஸ்.கே.எஸ் ரக பேருந்து ஒன்றோடு ஒன்று மோதி விபத்து ஏற்பட்டதாக  மாரான் மாவட்ட போலிஸ் தலைவர், சூப்ரிடென்டன் வோங் கிம் வாய் கூறினார். 

டிரெய்லர் லாரியானது கம்போங் அவாவிலிருந்து பண்டார் ஜெங்கா நோக்கி சென்று கொண்டிருந்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்தது 

கட்டுப்பாட்டை இழந்த டிரெய்லார் லாரி இந்த விபத்தை ஏற்படுத்த காரணமாயின. இருப்பினும், டிரெய்லர் ஓட்டுநர் எந்தவொரு காயமும் இல்லாமல் உயிர் தப்பினார். 

இந்த சம்பவம் N 166/59-இன் விதி 10-இன் படி விசாரிக்கப்பட்டு வருகிறது.

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset