செய்திகள் மலேசியா
திறமையும் வாய்ப்புகளும் கைகோர்த்துச் செல்ல வேண்டும்; அப்போதுதான் இளைஞர்கள் பின்தங்க மாட்டார்கள்: ஜாஹித்
கோலாலம்பூர்:
பயிற்சி, சான்றிதழ் அல்லது தொழில் வாய்ப்புகளை எங்கே பெறுவது என்று தெரியாத காரணத்தால் இளைஞர்கள் பின்தங்கிவிடக் கூடாது.
இதற்காக திறமையைச் சரியான வாய்ப்புகளுடன் இணைப்பதில் அரசாங்கம் ஒரு பெரிய பங்கை வகிக்கிறது.
ஒரு குறிப்பிட்ட குழுவிற்குத் தகுதியான வாய்ப்புகள் வழங்கப்படவில்லை என்பதற்காக, அத்திறமை வீணடிக்கப்படக்கூடாது என்று துணைப் பிரதமர் டத்தோஸ்ரீ டாக்டர் அஹ்மத் ஜாஹித் ஹமிடி கூறினார்.
திறமை என்பது உலகளாவியது.ஆனால் வாய்ப்பு அப்படி அல்ல.
ஏனெனில் அது எந்தக் குடும்பம், சமூகம், பின்னணியிலிருந்தும் உருவாகலாம்.
இருப்பினும், வாய்ப்புக்கான அணுகல் ஒவ்வொரு தனிநபருக்கும் எப்போதும் சமமாக இருக்காது என்று அவர் வலியுறுத்தினார்.
திறமைகள் உண்மையான முன்னேற்றமாக மாற்றப்படுவதை உறுதி செய்வதே இன்றைய அடுத்த கட்டம்.
மேம்பட்ட திறன்கள் சிறந்த வேலைகள், அதிக வருமானம், பாதுகாப்பான எதிர்காலத்திற்கு வழிவகுக்கும் ஒரு சூழலை நாம் உருவாக்க வேண்டும்.
மனித மூலதன மேம்பாடு இதைத்தான் அடைய வேண்டும். நாம் பொருளாதாரத்திற்காக மட்டும் தொழிலாளர்களை உருவாக்கவில்லை.
குடும்பங்களை மேம்படுத்தவும், எதிர்கால சந்ததியினர் தங்களுக்கு முந்தைய தலைமுறையினரை விட மேலும் முன்னேறவும் நாங்கள் சமூக முன்னேற்றத்திற்கான பாதைகளை உருவாக்குகிறோம் என்று அவர் கூறினார்.
முக்மின் அமைப்பின் முக்மின் திறன் திட்ட தொடக்க விழாவில் துணைப் பிரதமரின் உரையை உயர்கல்வி அமைச்சர் டத்தோஸ்ரீ டாக்டர் ஸம்ரி அப்துல் காதிர் வாசித்தார்.
இந்நிகழ்ச்சியில் முக்மின் தலைவர் டத்தோ ஷாகுல் தாவூத் உட்பட பல பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
August 10, 2026, 1:11 pm
கோலாலம்பூர் காற்பந்து மைதானத்திற்கு வெளியே நிகழ்ந்த கைகலப்பு: போலிஸ் விசாரணை
August 10, 2026, 12:58 pm
குடிநுழைவு துறையின் சின்னத்தை வாகனத்தில் பயன்படுத்திய பாகிஸ்தான் நாட்டு ஆடவர் கைது
August 10, 2026, 12:45 pm
மாரானில் பேருந்து- டிரெய்லர் மோதி பயங்கர சாலை விபத்து: நால்வர் காயம்
August 10, 2026, 12:41 pm
நெகிரி செம்பிலான் மாநில DAP தலைவராக J.அருள் குமார் நியமனம்
August 10, 2026, 11:21 am
