செய்திகள் மலேசியா
இந்திய முஸ்லிம் மக்களின் திறனை மேம்படுத்த அரசாங்கம் சிறப்பு நிதியை ஒதுக்க வேண்டும்: டத்தோ வீரா ஷாகுல்
கோலாலம்பூர்:
இந்திய முஸ்லிம் மக்களின் திறனை மேம்படுத்த அரசாங்கம் சிறப்பு நிதியை ஒதுக்க வேண்டும்.
முக்மின் அமைப்பின் தலைவர் டத்தோ வீரா ஷாகுல் தாவூத் இக் கோரிக்கையை முன்வைத்தார்.
வர்த்தகத்திலும் கல்வியிலும் சாதித்து வரும் இந்திய முஸ்லிம்கள் திவேட் எனப்படும் திறன் கல்வி துறையிலும் சாதிக்க வேண்டும்.
குறிப்பாக திறன் மேம்பாட்டில் இந்திய முஸ்லிம் மக்கள் பின்தங்கி விடக் கூடாது.
இதன் அடிப்படையில் தான் முக்மின் திறன் திட்டத்தை முக்மின் அமைப்பு அறிமுகம் செய்துள்ளது.
இத்திட்டத்தின் கீழ் அடுத்த 5 ஆண்டுகளில் 50,000 இந்திய முஸ்லிம் மக்களின் திறனை மேம்படுத்துவதை முக்மின் இலக்காக உள்ளது.
உண்மையில் துணைப் பிரதமர் டத்தோஸ்ரீ ஜாஹித் ஹமிடி இத்திட்டத்தை அறிமுகம் செய்வதாக இருந்தது.
ஆனால் உடல் நலக் குறைவால் துணைப் பிரதமர் இவ் விழாவில் கலந்து கொள்ளவில்லை.
அவரின் பிரதிநிதியாக வந்துள்ள உயர் கல்வியமைச்சர் டத்தோஸ்ரீ ஜம்ரி அப்துல் காதிரிடம் ஒரு கோரிக்கையை முன்வைக்கிறேன்.
அதாவது திவேட் கல்விக்கு துணைப் பிரதமர் டத்தோஸ்ரீ ஜாஹித் தான் தலைமையேற்று உள்ளார்.
ஆக இந்திய முஸ்லிம் மக்களின் திறனை மேம்படுத்த அரசாங்கம் சிறப்பு நிதியை ஒதுக்க வேண்டும்.
டத்தோஸ்ரீ ஜம்ரி எங்களின் கோரிக்கையை டத்தோஸ்ரீ ஜாஹித் ஹமிடியிடம் கொண்டு சேர்ப்பார் என்ற நம்பிக்கை எங்களுக்கு உள்ளது.
இந்நிதி இந்திய முஸ்லிம் சமூகத்திற்கு பெரும் பயனாக இருக்கும் என்று டத்தோ வீரா ஷாகுல் தாவூத் கூறினார்..
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
August 10, 2026, 12:41 pm
நெகிரி செம்பிலான் மாநில DAP தலைவராக J.அருள் குமார் நியமனம்
August 10, 2026, 12:35 pm
திறமையும் வாய்ப்புகளும் கைகோர்த்துச் செல்ல வேண்டும்; அப்போதுதான் இளைஞர்கள் பின்தங்க மாட்டார்கள்: ஜாஹித்
August 10, 2026, 11:21 am
சரவாக், சிலாங்கூர் மாநிலங்களில் உள்ள 10 பகுதிகளில் காற்றின் தரம் ஆரோக்கியமற்ற நிலையில் பதிவு
August 9, 2026, 2:41 pm
