நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

முக்மின் திறன் திட்டம்; இந்திய முஸ்லிம் சமூகத்திற்காக 15,000 வேலை வாய்ப்புகளை உருவாக்க வேண்டும்: டத்தோஸ்ரீ ஸம்ரி

கோலாலம்பூர்:

நாட்டில் தொழில்நுட்ப, தொழிற்கல்வியான திவேட் என்பது இரண்டாம் நிலைத் தேர்வு என்ற எண்ணம் தற்போது மாறி வருகிறது.

அதிகமான குடும்பங்களும், இளம் மலேசியர்களும் திறன் அடிப்படையிலான கல்வி நல்ல வேலை வாய்ப்புகளையும், சிறந்த எதிர்காலத்தையும் உருவாக்கும் என்பதை உணரத் தொடங்கியுள்ளனர் என்று உயர்க்கல்வி அமைச்சர் டத்தோஸ்ரீ ஸம்ரி அப்துல் காடீர் கூறினார்.

திவேட் இனி ஒரு மாற்று வழி அல்ல. இது வாழ்க்கையில் சிறந்து விளங்குவதற்கான ஒரு முக்கியப் பாதை.

எனவே, இந்திய முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்த இளைஞர்களுக்காக 15,000 வேலை வாய்ப்புகளை உருவாக்க வேண்டும்.

இந்தத் திறன்களை நமது மக்களுக்கான உண்மையான வேலை வாய்ப்புகளாகவும், வளர்ச்சிக்கான வாய்ப்புகளாகவும் மாற்றுவதே நமது நோக்கம் என்று துணைப்பிரதமர் டத்தோஸ்ரீ அஹ்மத் ஸாஹிட் ஹமிடியின் பிரதிநிதியாக முக்மின் திறன் அறிமுக விழாவில் கலந்து கொண்ட அவர் இவ்வாறு தெரிவித்தார்.

தொழிற்துறைகள் மலேசியாவுக்கு வரும்போது, அவர்களுக்குத் தேவையான திறமையான பணியாளர்கள், வலுவான தொழில்துறைச் சூழல், வளர்ச்சிக்குத் தேவையான திறன் ஆகிய அனைத்தும் தயாராக இருக்கும் வகையில் நமது பணியாளர்களை உருவாக்கி வருகிறோம்.

நாம் அனைவரும் ஒன்றாக வளரக்கூடிய சூழலை உருவாக்குவதே எங்கள் இலக்கு.

இன்று நாம் எடுக்க வேண்டிய அடுத்த முக்கியமான நடவடிக்கை, திறன்களை உண்மையான முன்னேற்றமாகவும், வேலைவாய்ப்பாகவும், மக்களின் சிறந்த எதிர்காலமாகவும் மாற்றுவதை உறுதி செய்வதாகும் என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset