நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அடுத்த 2 நாட்கள் மருத்துவர் கண்காணிப்பில் இருப்பார்: முதன்மைச் செயலாளர் அறிவிப்பு

புத்ரா ஜெயா:

பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் மருத்துவ நிபுணர் குழுவால் பரிந்துரைக்கப்பட்ட பரிசோதனைகள், மருத்துவ நடைமுறைகளுக்கு உட்பட்டு வருகிறார் என்று அவரது மூத்த முதன்மை ஊடகச் செயலாளர் துங்கு நஷ்ருல் அபைதா ஓர் அறிக்கை வாயிலாக தெரிவித்துள்ளார்.

பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தற்போது மருத்துவ நிபுணர் குழுவால் பரிந்துரைக்கப்பட்ட பரிசோதனைகளை மேற்கொண்டு வருகிறார். அவர் இரண்டு நாட்களுக்கு மருத்துவக் கண்காணிப்பில் இருப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இப் பரிசோதனைகளும் மருத்துவ நடைமுறைகளும் சுமூகமாக நடைபெறவும், அவருக்கு நீடித்த நல்வாழ்வு கிடைக்கப்பெற்று, இறைவனின் அருளால் அவர் விரைவில் தனது கடமைகளை வழக்கம் போல் மீண்டும் மேற்கொள்ளவும் நாம் பிரார்த்திப்போம் என்று அவர் அந்த அறிக்கை மூலம் கேட்டுக் கொண்டுள்ளார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset