நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

2030க்குள் 50,000 இந்திய முஸ்லிம்களின் திறன் மேம்படுத்துவதே முக்மின் திறன் திட்டத்தின் இலக்காகும்: டத்தோ வீரா ஷாகுல்

கோலாலம்பூர்: 

எதிர்வரும் 2030க்குள் 50,000 இந்திய முஸ்லிம்களின் திறன் மேம்படுத்துவதே முக்மின் திறன் திட்டத்தின் இலக்காகும்.

முக்மின் அமைப்பின் தலைவர் டத்தோ வீரா ஷாகுல் தாவூத் இதனை கூறினார்.

நாட்டில் உள்ள இந்திய முஸ்லிம் மக்களை ஒருங்கிணைப்பதுடன் அவர்களை மேம்படுத்துவதுடன் அவர்களின் உரிமைக்காக குரல் கொடுக்கும் நோக்கில் தான் முக்மின் அமைப்பு தொடங்கப்பட்டது.

முக்மின் அமைப்பு தொடங்கப்பட்டது முதல் அதன் இலக்கின் அடிப்படையில் பல்வேறு திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

குறிப்பாக பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் தலைமையில் நடைபெற்ற முக்மின் விழாவில் அந்நியத் தொழிலாளர்கள் பிரச்சினைக்கான தீர்வு எட்டப்பட்டது.

இது முக்மின் அமைப்பின் முயற்சிக்கு கிடைத்த மகத்தான வெற்றியாகும்.

இதன் தொடர்ச்சியாக முக்மின் அமைப்பின் முக்மின் திறன் திட்டம் இன்று அறிமுகம் கண்டது.

நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு இந்திய முஸ்லிம் மக்கள் பேருதவியாக இருந்து வருகின்றனர்.

வர்த்தகத்துடன் தற்போது கல்வியிலும் இந்திய முஸ்லிம் மக்கள் சாதித்து வருகின்றனர்.

இம் மக்கள் திவேட்டிலும் கால் பதிக்க வேண்டும். குறிப்பாக தங்களின் ஒவ்வொரு திறனையும் மேம்படுத்திக் கொள்ள வேண்டும்.

இதன் அடிப்படையில் தான் முக்மின் திறன் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

அடுத்த 5 ஆண்டுகளில் 50,000 இந்திய முஸ்லிம்களின் திறன் மேம்படுத்துவதே முக்மின் திறன் திட்டத்தின் முதன்மை இலக்காகும்.

இம் முயற்சி இந்திய முஸ்லிம் சமுதாயத்தில் மிகப் பெரிய உருமாற்றத்தை கொண்டு வரும்.

ஆக இந்திய முஸ்லிம் மக்கள் இந்த திறன் புரட்சிக்கு தயாராக வேண்டும் என்று டத்தோ வீரா ஷாகுல் தாவூத் கேட்டுக் கொண்டார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset