நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

சுக்மா பெண்கள் கால்பந்து போட்டியின் தங்கப்பதக்கத்தை சிலாங்கூர் அணி தற்காக்கும்: கென்னத் கண்ணா

பத்துகேவ்ஸ்:

சுக்மா பெண்கள் கால்பந்து போட்டியின் தங்கப்பதக்கத்தை சிலாங்கூர் அணி தொடர்ந்து  தற்காக்கும்.

சிலாங்கூர் மகளிர் அணியின் நிர்வாகி கென்னத் கண்ணா இதனை கூறினார்.

சுக்மா விளையாட்டு போட்டி வரும் ஆகஸ்ட் 15ஆம் தேதி அதிகாரப்பூர்வமாக தொடங்கவுள்ளது.

சிலாங்கூர் மாநிலம் இப்போட்டியை ஏற்று நடத்துகிறது.

இப்போட்டியில் களமிறங்கும் சிலாங்கூர் மகளிர் அணியின் நிர்வாகியாக நியமிக்கப்பட்டுள்ளேன்.

இதன் அடிப்படையில் விளையாட்டாளர்களுக்கான பயிற்சி உட்பட அனைத்து விவகாரங்களை நான் கவனித்து வருகிறேன்.

நீபயிற்சியாளர் ஓஸ்மேரோ தலைமையில் வீராங்கனைகள் அனைவரும் பயிற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

கடும் பயிற்சிகளுக்கு மத்தியில் இவர்கள் அனைவரும் போட்டிக்கு தயாராகி வருகின்றனர்.

கடந்த சுக்மா போட்டியில் சிலாங்கூர் அணி தங்கப்பதக்கத்தை வென்றது.

அந்த தங்கப்பதக்கத்தை தற்காக்க வேண்டும் என்பதே சிலங்கூர் அணியின் முதன்மை இலக்காக உள்ளது.

இந்த இலக்கை அடைய வீராங்கனைகள் அனைவரும் இறுதிவரை போராடுபவர்கள் என்று கென்னத் கண்ணா கூறினார்.

இதன்படி சுக்மா போட்டியில் களமிறங்கும் போட்டியாளர்களுக்கு இன்று சிறப்பு விருந்தோம்பல் வழங்கப்பட்டது.

பத்துகேவ்ஸ் ஓயே வாழை இலை உணவகத்தின் உரிமையாளர் பாபு ராமச்சந்திரன் விளையாட்டாளர்களுக்கு மதிய உணவை வழங்கி சிறப்பித்தார்.

கியோ நிறுவன நிர்வாகி சிஸியோ சலாபதி, துணை நிர்வாகி சூசன் உட்பட பலர் இதில் கலந்து கொண்டனர்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset