நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

சுனாமி மிரட்டல் ஓரளவு தணிந்துள்ளது: பசிபிக் சுனாமி எச்சரிக்கை நிலையம் அறிவிப்பு 

டோக்கியோ:

டோங்கா தீவுக்கருகே கடலுக்கடியில் எரிமலை வெடித்ததைத் தொடர்ந்து நிலவிய சுனாமி மிரட்டல் தணிந்துள்ளதாக பசிபிக் சுனாமி எச்சரிக்கை நிலையம் தெரிவித்துள்ளது.

இருப்பினும் பாதிக்கப்பட்ட கரையோரப் பகுதிகள் நிலைமையைத் தொடர்ந்து கண்காணிக்கும்படி அது எச்சரித்தது.

டோங்காவில் தொடர்புகள் துண்டிக்கப்பட்டிருப்பதால் எந்த அளவிற்குச் சேதம் ஏற்பட்டுள்ளது என்பது தெரியவில்லை.

தொடர்புகளை மீண்டும் கொண்டுவர பசிபிக் நாடுகளும் மனிதாபிமான அமைப்புகளும் சிரமப்படுகின்றன.

Japan's Pacific coast hit by tsunami waves after Tonga eruption | The Japan  Times

டோங்காவில் வசிக்கும் சுமார் 100,000 பேரைத் தொடர்புகொள்ள முடியவில்லை என்று தெரியவந்துள்ளது.

ஜப்பானில், அமாமீ நகரில் 1.2 மீட்டர் உயரமுள்ள சுனாமி அலை பதிவு செய்யப்பட்டது.

இதுவரை யாரும் காயமடைந்ததாகவோ பெரும் சேதம் ஏற்பட்டதாகவோ தகவல் இல்லை.

பசிபிக் கரையோரங்களில் வசிக்கும் 230,000 பேரை வீடுகளைவிட்டு வெளியேறும்படி அதிகாரிகள்  கேட்டுக்கொண்டனர்.

ஆஸ்திரேலியாவில் நியூ சௌத் வேல்ஸிலும் குவீன்ஸ்லந்திலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகக் கடற்கரைகள் மூடப்பட்டுள்ளன.

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset