செய்திகள் விளையாட்டு
பளுதூக்குதலுக்காக ஆண்டுக்கு 1 மில்லியன் ரிங்கிட் மானியம் வழங்குவது குறித்து இளைஞர் விளையாட்டுத் துறை அமைச்சு பரிசீலித்து வருகிறது
கோலாலம்பூர்:
பளுதூக்குதலுக்காக ஆண்டுக்கு 1 மில்லியன் ரிங்கிட் மானியம் வழங்குவது குறித்து இளைஞர் விளையாட்டுத் துறை அமைச்சு பரிசீலித்து வருகிறது.
இளைஞர், விளையாட்டுத் துறை அமைச்சர் டாக்டர் முஹம்மது தௌஃபிக் ஜொஹரி இதனை கூறினார்.
ஒலிம்பிக் போட்டிகளில் நாட்டின் முதல் தங்கப் பதக்கத்தை வெல்லும் தனது இலக்கில், பளுதூக்கும் விளையாட்டின் வளர்ச்சியை வலுப்படுத்தும் ஒரு முயற்சியாக,
மலேசிய பளுதூக்கும் கூட்டமைப்புக்கு ஆண்டுக்கு கூடுதலாக 1 மில்லியன் மானியம் ரிங்கிட் பெறுவதற்கான விண்ணப்பத்தை அமைச்சு பரிசீலிக்கத் தயாராக உள்ளது.
கூடுதல் நிதித் தேவைகள், குறிப்பாக நிர்வாகச் செலவுகள், பயிற்சியாளர் நலன் தொடர்பான மேலதிக தகவல்கள் அமைச்சிற்குக் கிடைத்த பிறகு, இந்த விண்ணப்பம் கூட்டமைப்பு தலைமையுடன் விரிவாக விவாதிக்கப்படும்.
இந்த ஆண்டு பளுதூக்குதல் மேம்பாட்டிற்காக அமைச்சு ஏற்கெனவே 4.1 மில்லியன் ரிங்கிட்டை ஒதுக்கியுள்ளது.
அதில் விளையாட்டு வீரர், பயிற்சியாளர் திட்டங்கள், அத்துடன் 'ரோட் டு கோல்ட்' முயற்சி, போடியம் திட்டம், பெலாபிஸ் திட்டம் மற்றும் அடிமட்டத் திறமை மேம்பாடு ஆகியவற்றின் மூலமான ஆதரவும் அடங்கும் என்று அவர் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
August 11, 2026, 12:58 pm
காற்பந்து கோல் அடித்த மகிழ்ச்சியில் பிரேசிலிய வீரர் சுரங்கப்பாதைக்குள் குதித்தார்
August 11, 2026, 9:36 am
பிபா தலைவருக்கு எதிராக முக்கியமான 3 கூட்டமைப்புகள் போர்க்கொடி
August 11, 2026, 9:33 am
சுக்மா விளையாட்டு போட்டடியில் 35 தங்கப் பதக்கங்களை வெல்ல பகாங் மாநிலம் இலக்கு
August 10, 2026, 11:17 am
என் வாழ்வின் முக்கிய நபர், என் தந்தை மறைந்து விட்டார்: மெஸ்சி உருக்கம்
August 10, 2026, 10:28 am
அனைத்துலக நட்புமுறை ஆட்டம்: செல்சி - ஜேடிதி சமநிலை
August 9, 2026, 1:15 pm
மெஸ்ஸியின் முதல் பயிற்சியாளரான அவரது தந்தை காலமானார்
August 9, 2026, 9:06 am
2026 ஆசியான் கிண்ண அரையிறுதி சுற்றில் ஹரிமாவ் மலாயா: பவித்திரன் அசத்தல்
August 8, 2026, 9:02 am
மரடோனாவின் இறுதிக் கட்ட வேதனையை சாட்சி வெளிப்படுத்துகிறார்
August 8, 2026, 8:59 am
