செய்திகள் மலேசியா
முக்மின் விழாவில் 200 க்கும் அதிகமான வெளிநாட்டு பேராளர்களோடு தமிழக சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் ஷாஜஹான், தொழில் அதிபர் அஹமத் புஹாரி கலந்துகொள்கிறார்கள்
கோலாலம்பூர்:
முக்மின் அமைப்பு ஏற்பாடு செய்துள்ள மாபெரும் நிகழ்வில் தமிழக சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் ஷாஜஹான், கலந்துகொள்கிறார் என்று முக்மின் தலைவர் டத்தோ வீரா ஷாகுல் ஹமீத் தாவுத் கூறினார்.
திறன்களின் அதிகாரப்பூர்வ வெளியீட்டு விழாவில் நாட்டின் துணைப்பிரதமர் டத்தோஸ்ரீ அஹ்மத் ஜாஹித் ஹமிடி கலந்துகொள்ளும் நிகழ்வில் பாபநாசம் தொகுதி சட்டமன்ற உறுப்பினரும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் மாநில பொதுச் செயலாளரும் தமிழக சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சருமான மாண்புமிகு ஏ. எம். ஷாஜஹான் கலந்து கொள்வது மகிழ்ச்சி அளிக்கிறது என்று அவர் மேலும் கூறினார்.
இந்த வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வில் பிரபல தொழிலதிபர் அஹமத் புஹாரி அவர்களுடன் இந்தியா, இலங்கை, ஐக்கிய அரபு அமீரகம், சிங்கப்பூர் நாடுகளில் இருந்து 200க்கும் மேற்பட்ட பேராளர்கள் கலந்துகொள்ள இருக்கின்றார்கள். இன்றும் நாளையும் நாளை மறுநாளும் தலைநகருக்கு அனைத்துலக பேராளர்கள் வந்து சேருவார்கள் என்று டத்தோ வீரா ஷாகுல் தெரிவித்தார்.
2026 ஆகஸ்ட் 9, ஞாயிற்றுக்கிழமை அன்று மாலை 7 மணிக்கு, கோலாலம்பூரில் உள்ள தி ஆர்ச் கேலரிஸில் நடைபெறும் இந்த நிகழ்வு வரலாற்றின் முக்கிய தடம் என்று கருதப்படுகிறது.
கடந்த மாதம் பினாங்கு பட்டர்வொர்த்தில் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கலந்து கொண்ட நிகழ்வில் மலேசிய இந்திய முஸ்லிம் பிள்ளைகளின் கல்விக்காக 2 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கீடு செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது துணைப்பிரதமர் டத்தோஸ்ரீ அஹ்மத் ஜாஹித் ஹமிடி நம் சமூக நிகழ்ச்சிக்கு வருகை தருவது கூடுதல் மகிழ்ச்சியை தருகிறது என்று டத்தோ வீரா ஷாகுல் தாவுத் கூறினார்.
- ஃபிதா
தொடர்புடைய செய்திகள்
August 7, 2026, 5:23 pm
போதைப்பொருள் கடத்தலைத் தடுக்க கேஎல்ஐஏவில் போலிஸ் பாதுகாப்பை பலப்படுத்தும்: ஹுசைன் ஒமார் கான்
August 7, 2026, 5:22 pm
கெஅடிலான் துணைத் தலைவர் பதவியிலிருந்து நூருல் இசா விலகியதை டத்தோஶ்ரீ அன்வார் வரவேற்றார்
August 7, 2026, 5:19 pm
இஸ்மாயில் சப்ரி கீழே விழுந்த இரண்டு விநாடிகளில் அவரது இதயம் நின்றுவிட்டது: வழக்கறிஞர்
August 7, 2026, 5:18 pm
இரண்டாவது சிலாங்கூர் திட்டம்: 5 முக்கியத் துறைகள் மூலம் மாநிலப் பொருளாதாரத்தை உயர்த்த இலக்கு
August 7, 2026, 4:08 pm
நாட்டின் முன்னாள் தலைமை நீதிபதி யூசோஃப் சின் வயது மூப்பு காரணமாக காலமானார்
August 7, 2026, 3:06 pm
