நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

புதிதாக பிறந்த குழந்தையைக் கொன்ற சம்பவம்: கல்லூரி மாணவர் மீது குற்றஞ்சாட்டப்பட்டது 

குளுவாங்: 

கடந்த வாரம் புதிதாக பிறந்த பச்சிளம் குழந்தையை கொலை செய்த குற்றத்திற்காக சந்தேக நபரான கல்லூரி மாணவர் மீது இங்குள்ள குளுவாங் மாஜிஸ்டிரெட் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டது 

மாஜிஸ்டிரெட் நுராஷிடா அப்துல் ரஹ்மான் முன்னிலையில் குற்றச்சாட்டு வாசிக்கப்பட்டபோது குற்றஞ்சாட்டப்பட்ட 19 வயதுடைய நுர்ஷஸ்வென் முஹம்மத் இட்ரிஸிடம் எந்தவொரு வாக்குமூலமும் பதிவு செய்யப்படவில்லை 

கடந்த ஜூலை 29ஆம் தேதி குளுவாங்கில் உள்ள தாமான் முத்தியாராவில் உள்ள வீடொன்றில் புதிதாக பிறந்த பெண் பச்சிளம் குழந்தையைக் கொலை செய்ததாக அவர் மீது குற்றஞ்சாட்டப்பட்டது 

குற்றவியல் சட்டம் செக்‌ஷன் 302, கொலை குற்றச்சாட்டின் கீழ் அந்த பெண் மீது குற்றம் சுமத்தப்பட்டது. 

குற்றம் நிரூபிக்கப்பட்டால் மரண தண்டனை அல்லது 40 ஆண்டுகளுக்கும் மேற்போகாத சிறைதண்டனை விதிக்கப்படும். மரண தண்டனை விதிக்கப்படவில்லை என்றால் குறைந்தது 12 பிரம்படிகள் விதிக்க வழிவகை செய்யப்படும் 

இந்த குற்றத்திற்காக சந்தேக நபருக்கு ஜாமின் வழங்கக்கூடாது என்று துணை அரசு வழக்கறிஞர் நிக் நொராதினி நிக் அஸ்மான் கூறினார். 

வேதியியல் மற்றும் பிரேதப் பரிசோதனை அறிக்கைகள் நிலுவையில் உள்ள நிலையில், இந்த வழக்கை அக்டோபர் 8 அன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ள நீதிமன்றம் நிர்ணயித்துள்ளது

-மவித்திரன் 

 

 

 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset