செய்திகள் மலேசியா
நாட்டின் முன்னாள் தலைமை நீதிபதி யூசோஃப் சின் வயது மூப்பு காரணமாக காலமானார்
கோலாலம்பூர்:
நாட்டின் முன்னாள் தலைமை நீதிபதி யூசோஃப் சின் வயது மூப்பு காரணமாக இன்று அதிகாலையில் காலமானார். அவருக்கு வயது 91
அவர் காலமான செய்தியை முன்னாள் வழக்கறிஞர் மன்றத்தின் தலைவர் எஸ்ரி அப்துல் வஹாப் உறுதிப்படுத்தினார்.
இன்று அதிகாலை 1 மணிக்குத் தனது தந்தை உயிரிழந்ததாக ஸுலியானா தெரிவித்தார் என்று எஸ்ரி குறுந்தகவல் மூலம் தெரிவித்திருந்தார்.
மறைந்தவரின் உடல் கோத்தா டமான்சாராவில் உள்ள பிரிவு 9 இஸ்லாமிய மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படுவதற்கு முன்பு, கெலானா ஜெயாவில் உள்ள அல்-ஹிதாயா மசூதியில் இறுதித் தொழுகைகள் நடைபெறும்.
கடந்த 1994 முதல் 2000 வரை நாட்டின் தலைமை நீதிபதியாக யூசோஃப் சின் பொறுப்பு வகித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
August 7, 2026, 5:23 pm
போதைப்பொருள் கடத்தலைத் தடுக்க கேஎல்ஐஏவில் போலிஸ் பாதுகாப்பை பலப்படுத்தும்: ஹுசைன் ஒமார் கான்
August 7, 2026, 5:22 pm
கெஅடிலான் துணைத் தலைவர் பதவியிலிருந்து நூருல் இசா விலகியதை டத்தோஶ்ரீ அன்வார் வரவேற்றார்
August 7, 2026, 5:19 pm
இஸ்மாயில் சப்ரி கீழே விழுந்த இரண்டு விநாடிகளில் அவரது இதயம் நின்றுவிட்டது: வழக்கறிஞர்
August 7, 2026, 5:18 pm
இரண்டாவது சிலாங்கூர் திட்டம்: 5 முக்கியத் துறைகள் மூலம் மாநிலப் பொருளாதாரத்தை உயர்த்த இலக்கு
August 7, 2026, 3:06 pm
