செய்திகள் மலேசியா
இரண்டாவது சிலாங்கூர் திட்டம்: 5 முக்கியத் துறைகள் மூலம் மாநிலப் பொருளாதாரத்தை உயர்த்த இலக்கு
ஷா ஆலாம்:
2030-ஆம் ஆண்டு வரையிலான மாநில வளர்ச்சி கட்டமைப்பின் முதுகெலும்பாக விளங்கும் இரண்டாவது சிலாங்கூர் திட்டத்தின் (RS-2) முதல் பணி, மாநிலப் பொருளாதாரத்தை மேலும் ஊக்குவிக்க 13 திட்டங்களை உள்ளடக்கிய ஐந்து முக்கிய துறைகளில் கவனம் செலுத்துகிறது.
இன்றைய சிலாங்கூர் மாநிலச் சட்டமன்றக் கூட்டத்தில் மாநில மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அமீருடின் ஷாரி இதனைத் தெரிவித்தார்.
மின் மற்றும் மின்னணுவியல், விண்வெளி மற்றும் தானியங்கித் துறை, டிஜிட்டல் பொருளாதாரம் மற்றும் படைப்பாற்றல் பொருளாதாரம் ஆகிய துறைகள் இதில் அடங்கும் என்று அவர் கூறினார்.
2030-ஆம் ஆண்டிற்குள் பொருளாதார வளர்ச்சி மற்றும் மொத்த உள்நாட்டு உற்பத்தியை 6.1 சதவீதமாகப் பெறுவதை இந்தத் திட்டம் இலக்காகக் கொண்டுள்ளது.
2030-ஆம் ஆண்டிற்குள் சிலாங்கூர் மாநிலம் மேம்பட்ட தொழில் மற்றும் கண்டுபிடிப்புகளின் மையமாக உருவெடுக்கும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
தானியங்கி முறை மூலமான உற்பத்தித்திறன் அதிகரிப்பு, செலவுப் போட்டித்தன்மை மற்றும் நிலையான ஊதிய வளர்ச்சியை உறுதி செய்யும் என்றும் அவர் குறிப்பிட்டுக் கூறினார்.
இரண்டாவது சிலாங்கூர் திட்டம் (RS-2) என்பது 6 முக்கிய இலக்குகள், 25 துறைகள் மற்றும் 98 திட்டங்களை உள்ளடக்கிய விரிவான மாநில வளர்ச்சித் திட்டமாகும்.
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
August 7, 2026, 5:23 pm
போதைப்பொருள் கடத்தலைத் தடுக்க கேஎல்ஐஏவில் போலிஸ் பாதுகாப்பை பலப்படுத்தும்: ஹுசைன் ஒமார் கான்
August 7, 2026, 5:22 pm
கெஅடிலான் துணைத் தலைவர் பதவியிலிருந்து நூருல் இசா விலகியதை டத்தோஶ்ரீ அன்வார் வரவேற்றார்
August 7, 2026, 5:19 pm
இஸ்மாயில் சப்ரி கீழே விழுந்த இரண்டு விநாடிகளில் அவரது இதயம் நின்றுவிட்டது: வழக்கறிஞர்
August 7, 2026, 4:08 pm
நாட்டின் முன்னாள் தலைமை நீதிபதி யூசோஃப் சின் வயது மூப்பு காரணமாக காலமானார்
August 7, 2026, 3:06 pm
