செய்திகள் மலேசியா
போதைப்பொருள் கடத்தலைத் தடுக்க கேஎல்ஐஏவில் போலிஸ் பாதுகாப்பை பலப்படுத்தும்: ஹுசைன் ஒமார் கான்
கோலாலம்பூர்:
நாட்டில் போதைப்பொருள் கடத்தலைத் தடுக்க கேஎல்ஐஏவில் போலிஸ் பாதுகாப்பை மேலும் பலப்படுத்து.
புக்கிட் அமான் போதைப்பொருள் குற்றப் புலனாய்வுத் துறையின் இயக்குநர் டத்தோ ஹுசைன் ஒமார் கான் இதனை கூறினார்.
கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தில் கூடுதலாக 50 பொது செயல்பாட்டுப் படை வீரர்களைப் பணியமர்த்தப்படவுள்ளனர்.
இதன் மூலமும் போதைப்பொருள் கண்டறிதலை மற்றொரு பாதுகாப்பு முன்னுரிமையாக வைப்பதன் மூலமும் போலிஸ் அங்கு பாதுகாப்பை வலுப்படுத்தும்.
தற்போதுள்ள பாதுகாப்பு நடைமுறைகளை மேம்படுத்துவதோடு, மலேசியா ஏர்போர்ட்ஸ் ஹோல்டிங்ஸ் பெர்ஹாட், மலேசிய எல்லைக் கட்டுப்பாடு, பாதுகாப்பு முகமை, மலேசிய அரச சுங்கத் துறை ஆகியவற்றுடனான ஒத்துழைப்பை போலிஸ்படை அதிகரிக்கும்.
துப்பாக்கிகள், வெடிபொருட்களுடன் போதைப்பொருட்களையும் மற்றொரு முன்னுரிமையாக வைப்பதற்கா அனைத்து பாதுகாப்புப் பணியாளர்களுடனான ஒத்துழைப்பை போலிஸ் அதிகரிக்கும்.
தற்போதுள்ள நடைமுறைகளை மேம்படுத்துவதன் மூலம் பாதுகாப்பு அம்சங்களையும் நாங்கள் அதிகரிப்போம் என்று அவர் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
August 7, 2026, 5:22 pm
கெஅடிலான் துணைத் தலைவர் பதவியிலிருந்து நூருல் இசா விலகியதை டத்தோஶ்ரீ அன்வார் வரவேற்றார்
August 7, 2026, 5:19 pm
இஸ்மாயில் சப்ரி கீழே விழுந்த இரண்டு விநாடிகளில் அவரது இதயம் நின்றுவிட்டது: வழக்கறிஞர்
August 7, 2026, 5:18 pm
இரண்டாவது சிலாங்கூர் திட்டம்: 5 முக்கியத் துறைகள் மூலம் மாநிலப் பொருளாதாரத்தை உயர்த்த இலக்கு
August 7, 2026, 4:08 pm
நாட்டின் முன்னாள் தலைமை நீதிபதி யூசோஃப் சின் வயது மூப்பு காரணமாக காலமானார்
August 7, 2026, 3:06 pm
