நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

புதிய கூட்டணியை அமைப்பதாக அறிவித்த நிலையில், பெர்சத்து கட்சி தானாகவே தேசியக் கூட்டணியில் இருந்து வெளியேறிவிடும்: ஹாடி

மாராங்:

புதிய கூட்டணியை அமைப்பதாக அறிவித்ததால், அதிகாரப்பூர்வ கடிதமோ அல்லது குழுவின் முடிவோ தேவையின்றி, தனது கூட்டணிக் கட்சியான பெர்சத்து கட்சி தானாகவே தேசியக் கூட்டணியில் இருந்து வெளியேறிவிட்டது.

பாஸ் கட்சியின் தலைவர் டான்ஶ்ரீ ஹாடி அவாங் கூறினார்.

தேசியக் கூட்டணி சட்ட விதியின் கொள்கைகளின்படி, மற்றொரு அரசியல் கூட்டணியில் இணைவது அல்லது அதை உருவாக்குவது.

ஒரு கட்சியின் கூட்டணி உறுப்புரிமையை தானாகவே முடிவுக்குக் கொண்டுவருகிறது.

அவர் மற்றொரு கூட்டணியை அமைப்பதாக ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார். அதன் காரணமாகவே, அவர் தானாகவே வெளியேறிவிடுகிறார்.

முறையாக இருக்க வேண்டிய அவசியமில்லை. சட்ட விதியின் படி, நாம் வேறு இடத்திற்குச் சென்றால், எல்லாம் முடிந்துவிடும்.

அவ்வளவுதான் என்று மாராங்கில் உள்ள ருசிலா மசூதியில் சொற்பொழிவாற்றிய பிறகு அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset