நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

கெஅடிலான் துணைத் தலைவர் பதவியிலிருந்து நூருல் இசா விலகியதை டத்தோஶ்ரீ அன்வார் வரவேற்றார்

அலோர் காஜா:

நூருல் இஸா கெஅடிலான் துணைத் தலைவர் பதவியிலிருந்து விலகும் முடிவை வரவேற்கத்தக்கது.

பிரதமரும் கெஅடிலான் தலைவருமான டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறினார்.

நூருல் இசா மேல்படிப்பு படிக்கச் செல்லும் முடிவைக் குறிப்பிட்டு, கட்சிக்கு வெளியே திட்டங்கள் இருந்தபோதிலும் அவர் கட்சியில் தொடர்ந்து தீவிரமாகச் செயல்பட்டு வருகிறது.

நூருல் இசாவுக்கு ஒரு வெளித் திட்டம் இருக்கிறது, அது சரிதான், நாங்கள் அதை ஏற்றுக்கொள்ளலாம்.

ஆனால், அவர் இன்னும் கட்சியில் தீவிரமாகச் செயல்பட்டு வருகிறார் என்று அலோர் காஜாவில் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் தெரிவித்துள்ளது.

முன்னதாக கட்சியின் இரண்டாவது முக்கியப் பதவியைத் துறந்தபோதிலும், டத்தோஶ்ரீ அன்வாரின் தலைமையின் கீழ் கட்சியின் போராட்டத்திற்குத் தொடர்ந்து ஆதரவளிப்பேன் என்று நேற்று நூருல் இசா வலியுறுத்தினார்.

தற்காலிகத் துணைத் தலைவராக சைபுசின் நசுதியன் இஸ்மாயிலும், தேர்தல் இயக்குநராக அமிருடின் ஷாரியும் தங்களது கடமைகளை விவேகத்துடனும் விடாமுயற்சியுடனும் நிறைவேற்றுவார்கள் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset