நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

நெகிரி செம்பிலான் மாநில அரசில் இந்திய பிரதிநிதி ஆட்சிக்குழு உறுப்பினர் அந்தஸ்தில் நியமிக்கப்படவுள்ளார் 

சிரம்பான்: 

நெகிரி செம்பிலான் மாநில அரசில் இந்திய பிரதிநிதி ஆட்சிக்குழு உறுப்பினர் அந்தஸ்தில் நியமிக்கப்படவுள்ளார். 

இந்த முடிவானது நெகிரி செம்பிலான் மாநில அரசில் இந்திய சமுதாயத்தைச் சேர்ந்த பிரதிநிதியும் பங்கேற்பதற்கான வாய்ப்பை வழங்கும் நோக்கில் இந்த நியமனம் செய்யப்படவுள்ளது. 

இந்த தகவலை நெகிரி செம்பிலான் மாநில மந்திரி பெசார் டத்தோ இஸ்மாயில் லாசிம் கூறினார். 

மாநில அரசின் அனைத்து இன மக்களுக்கும் ஆட்சிக்குழுவில் வாய்ப்பளிக்கும் வகையில் இப்புதிய நியமனம் செய்யப்படுவதாக அவர் குறிப்பிட்டார்.

இதன்படி நியமிக்கப்படும் பிரதிநிதி, நெகிரி செம்பிலான் மந்திரி பெசார் அலுவலகத்தின் கீழ் ஆட்சிக்குழு அந்தஸ்தில் பணியாற்றுவார் என அவர் மேலும் கூறினார்.

முன்னதாக, இன்று நெகிரி செம்பிலானின் ஶ்ரீ மெனாந்தி அரண்மனையில் நெகிரி செபிலான் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் பதவி உறுதிமொழி எடுத்து கொண்டனர். 

இதில் 10 ஆட்சிக்குழு உறுப்பினர்கள் பதவியேற்று கொண்ட நிலையில் இதில் ஒரு இந்தியர் கூட ஆட்சிக்குழு உறுப்பினராக நியமிக்கப்படவில்லை

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset