நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

1,260 மலேசியா ஏர்லைன்ஸ் விமானிகளுக்கு கட்டாய போதைப்பொருள் பரிசோதனை

சிப்பாங்:

இந்தோனேசியாவில் போதைப்பொருள் கடத்த முயன்ற குற்றச்சாட்டின் பேரில் தனது ஊழியர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.

இதைத் தொடர்ந்து, மலேசியா ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் 1,260 விமானிகள் அனைவருக்கும் போதைப்பொருள் பரிசோதனை செய்யுமாறு மலேசியா ஏவியேஷன் குழுமம் உத்தரவிட்டுள்ளது.

அதன்படி, உடனடியாகத் தொடங்கிய இந்தப் பரிசோதனை ஆகஸ்ட் 15-ஆம் தேதிக்குள் முடிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

குறிப்பிட்ட காலத்திற்குள் பரிசோதனையை மேற்கொள்ளத் தவறும் விமானிகள், அது தொடர்பான எந்தப் பிரச்சினைகளிலிருந்தும் விடுபட்டவர்கள் எனச் சான்றளிக்கப்படும் வரை விமானங்களை இயக்க அனுமதிக்கப்பட மாட்டார்கள்.

தற்போதுள்ள சீரற்ற சோதனைத் திட்டத்துடன் கூடுதலாக, பணியில் உள்ள அனைத்து விமானிகளுக்கும் இந்தக் கட்டாயப் பரிசோதனை அறிமுகப்படுத்தப்படும்.

பின்னர் இந்த நடவடிக்கை விமானப் பணிக்குழுவினருக்கும் விரிவுபடுத்தப்படும் என்று அந்த தேசிய விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.

கடந்த வாரம் சோகர்னோ-ஹட்டா அனைத்துலக விமான நிலையத்தில், 13 மில்லியன் ரிங்கிட்டுக்கும் அதிகமான மதிப்புள்ள 25 கிலோ எக்ஸ்டஸி உள்ளிட்ட போதைப்பொருட்கள் தனது பயணப் பைகளில் மறைத்து வைக்கப்பட்டிருந்ததாகக் கூறப்படும் நிலையில், ஒரு மலேசிய விமானி கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset