செய்திகள் மலேசியா
புதிய ஆட்சிக் குழு உறுப்பினர்கள் தங்கள் கடமைகளை நேர்மையாக, நியாயமாக, தொழில்முறையாக நிறைவேற்ற வேண்டும்: துவாங்கு முஹ்ரிஸ்
கோல பிலா:
புதிய மாநில செயற்குழு உறுப்பினர்கள் தங்கள் நம்பிக்கையையும் பொறுப்புகளையும் நேர்மையாகவும், நியாயமாகவும், தொழில்முறையாகவும் நிறைவேற்ற வேண்டும்.
நெகிரி செம்பிலான் யாங் டி பெர்துவான் பெசார், துவாங்கு முஹ்ரிஸ் துவாங்கு முனாவிர் இதனை வலியுறுத்தினார்.
குறிப்பாக, ஒப்பந்தப்புள்ளிகள் அல்லது அரசாங்கத் திட்டங்களை வழங்குவது தொடர்பான முடிவுகளை எடுக்கும்போது, அனைத்து ஆட் .சிக் குழு உறுப்பினர்களும் தங்களுக்கு வழங்கப்பட்ட அதிகாரத்தைத் தனிப்பட்ட, குடும்ப அல்லது நண்பர் நலன்களுக்காகத் தவறாகப் பயன்படுத்தக் கூடாது.
நான் முன்பே கூறியது போல், நாட்டிற்கு உயர்ந்த தரங்களைக் கொண்ட தலைவர்கள் அல்லது கண்ணியமிக்க நபர்கள் மிகவும் தேவைப்படுகிறார்கள்
அதிகாரத்தையும் பதவியையும் தவறாகப் பயன்படுத்துவது, மக்களின் நலனுக்காக வகுக்கப்பட்ட கொள்கைகளைச் செயல்படுத்துவதில் அநீதிக்கும் பலவீனத்திற்கும் வழிவகுக்கும்.
இஸ்தானா பெசார் ஸ்ரீ மெனந்தியில் நடைபெற்ற நெகிரி செம்பிலான் ஆட்சிக் குழு உறுப்பினர்களின் பதவியேற்பு விழாவில் அவர் இவ்வாறு கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
August 7, 2026, 12:42 pm
1,260 மலேசியா ஏர்லைன்ஸ் விமானிகளுக்கு கட்டாய போதைப்பொருள் பரிசோதனை
August 7, 2026, 12:25 pm
பேரா மாநில கண்ணதாசன் விழா: ஆகஸ்ட் 15ஆம் தேதி நடைபெறுகிறது
August 7, 2026, 11:22 am
முக்மின் விழாவில் துணைப் பிரதமர் டத்தோஸ்ரீ அஹ்மத் ஜாஹித் கலந்து கொள்கிறார்
August 7, 2026, 10:36 am
திரெங்கானு பெர்சத்து கட்சியின் மூன்று மூத்த தலைவர்கள் ராஜினாமா
August 7, 2026, 10:22 am
