செய்திகள் மலேசியா
பெருங்குடல் புற்றுநோய்க்கும் அதி-பதப்படுத்தப்பட்ட உணவுக்கும் தொடர்பு உண்டு: பினாங்கு பயனீட்டாளர் சங்கம் எச்சரிக்கை
பினாங்கு:
அதி-பதப்படுத்தப்பட்ட உணவுகளை உட்கொள்வதற்கும் பெருங்குடல் புற்றுநோய்க்கும் இடையே ஒரு தொடர்பு இருப்பதற்கான வலுவான சான்றுகள் இருப்பதால், அவற்றை உட்கொள்வதைத் தவிர்க்குமாறு பினாங்கு பயனீட்டாளர் சங்கம் பயனீட்டாளர்களை எச்சரித்துள்ளது.
அதி-பதப்படுத்தப்பட்ட உணவுகளில் ஆற்றல், சேர்க்கப்பட்ட சர்க்கரை, சோடியம், ஆரோக்கியமற்ற கொழுப்புகள் அதிகமாகவும், நார்ச்சத்து, புரதம், நுண்ணூட்டச்சத்துக்கள் குறைவாகவும் உள்ளன என அச்சங்கத்தின் தலைவர் முஹைதீன் அப்துல் காதர் தெரிவித்தார்.
மலேசியாவில் மிகவும் பிரபலமான பதப்படுத்தப்பட்ட உணவுகளில் ஒன்று உடனடி நூடுல்ஸ், திடீர் மீ ஆகும்.
இவை மலிவானவை, பல்வேறு சுவைகளிலும் வடிவங்களிலும் கிடைக்கின்றன, மேலும் சில நிமிடங்களில் சமைக்கக்கூடியவை.
2024-ஆம் ஆண்டில், 1,692 மில்லியன் பரிமாறல்கள் உட்கொள்ளப்பட்டதன் மூலம், உடனடி நூடுல்ஸ் பயனீட்டில் மலேசியா உலகில் 13-வது இடத்தைப் பிடித்துள்ளது.
மலேசியாவில், தேசிய புற்றுநோய் பதிவகம் வெளியிட்ட அறிக்கையின்படி, பெருங்குடல் புற்றுநோய் ஆண்களுக்கு மிகவும் பொதுவான புற்றுநோயாகவும், பெண்களுக்கு இரண்டாவது பொதுவான புற்றுநோயாகவும் உள்ளது.
இது இன்று மலேசியர்கள் எதிர்கொள்ளும் மிகப்பெரிய சுகாதார அச்சுறுத்தல்களில் ஒன்றாக விளங்குகிறதுஎன்றார் முகைதீன்.
உலகம் முழுவதும் ஏற்படும் அனைத்து புற்றுநோய் பாதிப்புகளிலும் பெருங்குடல் புற்றுநோய் தற்போது கிட்டத்தட்ட 10 சதவீதத்தைக் கொண்டுள்ளது.
மலேசியாவில், சீன மக்களிடையே இதன் பாதிப்பு மிக அதிகமாக உள்ளது, அதைத் தொடர்ந்து மலாய்க்காரர்கள், இந்தியர்களிடையே காணப்படுகிறது.
தற்போது 20 முதல் 50 வயதுக்குட்பட்ட இளம் மலேசியர்களிடையே இந்நோய் பாதிப்புகள் அதிகரித்து வருகின்றன.
இந்தப் போக்கை நிபுணர்கள் மிகவும் கவலைக்குரியதாகவும், வாழ்க்கை முறை மற்றும் உணவுப் பழக்கங்களில் ஏற்படும் மாற்றங்களின் அறிகுறியாகவும் விவரிக்கின்றனர்.
பலர் சமைத்து சாப்பிடாமல் பதப்படுத்தப்பட்ட உணவுகளில் மயக்கம் கொண்டுள்ளனர்.
அதிக அளவு சர்க்கரை, உப்பு, நிறைவுற்ற கொழுப்பு மற்றும் உணவுச் சேர்க்கைப் பொருட்களைக் கொண்ட, அதிதீவிரமாகப் பதப்படுத்தப்பட்ட, உடனடியாக உண்ணக்கூடிய உணவுகளின் நுகர்வு, இளம் வயதில் ஏற்படும் பெருங்குடல் புற்றுநோய் அதிகரிப்புக்கு இணையாக உயர்ந்துள்ளது
அதே நேரத்தில் பதப்படுத்தப்பட்ட உணவுகளைப்பற்றிய உண்மையான தகவல்கள் பயனீட்டாளர்களுக்கு தெரியபடுத்த வேண்டும் என முஹைதீன் அப்துல் காதர் வேண்டுகோள் விடுத்தார்.
- ஃபிதா
தொடர்புடைய செய்திகள்
August 7, 2026, 12:42 pm
1,260 மலேசியா ஏர்லைன்ஸ் விமானிகளுக்கு கட்டாய போதைப்பொருள் பரிசோதனை
August 7, 2026, 12:25 pm
பேரா மாநில கண்ணதாசன் விழா: ஆகஸ்ட் 15ஆம் தேதி நடைபெறுகிறது
August 7, 2026, 11:22 am
முக்மின் விழாவில் துணைப் பிரதமர் டத்தோஸ்ரீ அஹ்மத் ஜாஹித் கலந்து கொள்கிறார்
August 7, 2026, 10:36 am
திரெங்கானு பெர்சத்து கட்சியின் மூன்று மூத்த தலைவர்கள் ராஜினாமா
August 7, 2026, 10:22 am
