செய்திகள் மலேசியா
நெகிரி செம்பிலானின் 10 ஆட்சிக் குழு உறுப்பினர்கள் பதவியேற்றனர்; லிங்கி, பாலோங் சட்டமன்ற உறுப்பினர்களின் பதவி நீட்டிப்பு
சிரம்பான்:
புதிய நெகிரி செம்பிலான் அரசாங்கத்தின் பத்து ஆட்சிக் குழு உறுப்பினர்கள் இன்று பதவியேற்றனர்.
இதில் எட்டு புதிய முகங்களுடன் இரண்டு மாநில சட்டமன்ற உறுப்பினர்கள் தங்கள் பதவிகளை தக்கவைத்துக் கொண்டனர்.
நெகிரி செம்பிலானின் யாங் டிபெர்டுவான் பெசார், துவாங்கு முஹ்ரிஸ் துவாங்கு முனாவிர் ஆகியோர் முன் இன்று இஸ்தானா பெசார் செரி மெனந்தியில் நடந்த பதவியேற்பு விழாவில் அவர்கள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.
லிங்கி சட்டமன்ற உறுப்பினர் டத்தோ முகமட் பைசல் ரம்லி, பாலோங் சட்டமன்ற உறுப்பினர் டத்தோ முஸ்தபா நாகூர் ஆகிய இரண்டு சட்டமன்ற உறுப்பினர்கள் ஆட்சிக் குழு உறுப்பினர்கள் வரிசையில் தக்கவைக்கப்பட்டனர்.
எட்டு புதிய ஆட்சிக் குழு உறுப்பினர்களான செம்போங் சட்டமன்ற உறுப்பினர் டத்தோ ஜைபுல்பஹ்ரி இட்ரிஸ்; சியோவ் காங் சூன் (சென்னா), சிட்டி நூர் உமைரா ஹசிம் (லாபு), டத்தோ முகமட் அஸ்னா அமின் (லெங்கெங்), டத்தோ முகமட் ரஸி முகமட் அலி (சுங்கை லூய்), சுஹைமிசன் பிசார் (ஜெமன்சே), முகமட் ஃபைரூஸ் முகமது இசா (செர்டிங்), டத்தோ ரசாலி (செர்திங்) ஆகியோர் பதவி உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.
இவ்விழாவில் சுங்கே உஜோங் சட்டமன்ற உறுப்பினர், டத்தோ கிளானா பெட்ரா முஹம்மது ஃபாரிஸ் ஜொஹாரி, ரெம்பாவ் சட்டமன்ற உறுப்பினர், டத்தோ சேடியா ராஜா ஹாசன் அப் ஹமிட், மென்டேரி பெசார், டத்தோ இஸ்மாயில் லாசிம் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
August 7, 2026, 12:42 pm
1,260 மலேசியா ஏர்லைன்ஸ் விமானிகளுக்கு கட்டாய போதைப்பொருள் பரிசோதனை
August 7, 2026, 12:25 pm
பேரா மாநில கண்ணதாசன் விழா: ஆகஸ்ட் 15ஆம் தேதி நடைபெறுகிறது
August 7, 2026, 11:22 am
முக்மின் விழாவில் துணைப் பிரதமர் டத்தோஸ்ரீ அஹ்மத் ஜாஹித் கலந்து கொள்கிறார்
August 7, 2026, 10:36 am
திரெங்கானு பெர்சத்து கட்சியின் மூன்று மூத்த தலைவர்கள் ராஜினாமா
August 7, 2026, 10:22 am
