நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

இஸ்மாயில் சப்ரி நெஞ்சு வலி என்று IJN இல் அனுமதி: சொத்து அறிவிப்புக் குற்றச்சாட்டுகள் ஐஜேஎன்னில் பதிவு செய்யப்படவுள்ளன

கோலாலம்பூர்:

முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் மீது இன்று காலை எம்ஏசிசி சட்டத்தின் கீழ் தேசிய இதய மருத்துவமனையில் (ஐஜேஎன்) குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்படும்.

பெரா நாடாளுமன்ற உறுப்பினர் மீதான குற்றச்சாட்டுகள், செஷன்ஸ் நீதிமன்றமாக அறிவிக்கப்படவுள்ள ஐஜேஎன்னில் விசாரிக்கப்படும்.

சற்று நேரத்திற்கு முன்பு ஊடகங்கள் தொடர்பு கொண்டபோது, ​​அவரது வழக்கறிஞர் ரகுநாத் கேசவன் இதை உறுதிப்படுத்தினார்.

ஆம், அவர் தற்போது ஐஜேஎன் மருத்துவமனையில் இருக்கிறார். 

அங்கு வாக்குமூலத்தைப் பதிவு செய்யுமாறு துணை அரசு வழக்கறிஞர் கோரிக்கை விடுப்பார் என்று அவர் கூறினார்.

டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரிக்கு எதிரான இந்த வழக்கு, சொத்துக்களை அறிவிப்பது தொடர்பானது என்று நம்பப்படுகிறது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset