செய்திகள் மலேசியா
உடல்நலக் குறைவு காரணமாக இஸ்மாயில் சப்ரி மீதான வழக்கு விசாரணை ஆகஸ்ட் 27ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது
கோலாலம்பூர்:
முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் மீதான வழக்கு விசாரணை இன்று நடைபெறவிருந்தது.
இந்நிலையில், அவரது உடல்நலக் குறைவு காரணமாக ஆகஸ்ட் 27ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இன்று நடைபெறவிருந்த குற்றச்சாட்டுகளை வாசிப்பதையும், வாக்குமூலங்களைப் பெறுவதையும் ஒத்திவைக்கக் கோரி, இஸ்மாயில் சப்ரியின் வழக்கறிஞர் டத்தோ அமார் ஹம்சா அர்ஷத் தாக்கல் செய்த மனுவை அமர்வு நீதிமன்ற நீதிபதி சுசானா ஹுசைன் ஏற்றுக் கொண்டார்.
மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தால் (எம் ம்ஏசிசி) நேற்று வாக்குமூலம் பெறப்பட்டபோது இஸ்மாயில் சப்ரிக்கு உடல்நலக் கோளாறுகள் இருந்ததாகவும், பின்னர் அவர் ஐஜேஎன்னுக்கு அவசரமாக அழைத்துச் செல்லப்பட்டதாகவும் அமர் ஹம்ஸா முன்னதாக நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தார்.
பேரா நாடாளுமன்ற உறுப்பினர் தேசிய இதய நிறுவனத்தில் (சிகிச்சை பெற்று வருவதாகவும், இன்று பிற்பகல் சீரற்ற இதயத் துடிப்பு (அரித்மியா) தொடர்பான ஒரு மருத்துவச் செயல்முறைக்கு உட்படுத்தப்படுவார் என்றும் அவர் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
August 7, 2026, 12:42 pm
1,260 மலேசியா ஏர்லைன்ஸ் விமானிகளுக்கு கட்டாய போதைப்பொருள் பரிசோதனை
August 7, 2026, 12:25 pm
பேரா மாநில கண்ணதாசன் விழா: ஆகஸ்ட் 15ஆம் தேதி நடைபெறுகிறது
August 7, 2026, 11:22 am
முக்மின் விழாவில் துணைப் பிரதமர் டத்தோஸ்ரீ அஹ்மத் ஜாஹித் கலந்து கொள்கிறார்
August 7, 2026, 10:36 am
திரெங்கானு பெர்சத்து கட்சியின் மூன்று மூத்த தலைவர்கள் ராஜினாமா
August 7, 2026, 10:22 am
