நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

பேரா மாநில கண்ணதாசன் விழா: ஆகஸ்ட் 15ஆம் தேதி நடைபெறுகிறது

கோலாலம்பூர்:

கண்ணதாசன் அறவாரியத்தின் ஏற்பாட்டில் நூற்றாண்டு விழாவின் பயணத்தில், பினாங்கு மாநிலத்தைத் தொடர்ந்து தற்போது பேரா மாநிலத்தில் ஈப்போ மாநகரத்தில் கண்ணதாசன் விழா கோலாகலமாக கொண்டாடப்படவிருக்கிறது.

வரும் ஆகஸ்ட் 15ஆம் தேதி சனிக்கிழமை மதியம் ஒன்றரை தொடங்கி மாலை 5 மணி வரை தமிழ்நாட்டின் மிகச் சிறந்த பேச்சாளர்கள் தா.இராமலிங்கம், மரபின் மைந்தன் முத்தையா, தாமல் கோ.சரவணன் ஆகியோர் வெவ்வேறு தலைப்புகளில் மிகச் சிறந்த இலக்கிய உரையை ஆற்றவிருக்கிறார்கள்.

மஇகா துணைத் தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் எம். சரவணன்  தலைமையில் இடம்பெறும் இந்நிகழ்ச்சியில், பேரா மாநிலத்தைச் சேர்ந்த ஐவருக்கு கண்ணதாசன் அறவாரியத்தின் சார்பில் விருதும் வழங்கப்பட விருக்கிறது.

கண்ணதாசனின் கருத்தாழமிக்கப் பாடல்களோடு தொடங்கும் இந்நிகழ்ச்சி சிறந்த இலக்கிய விருந்தாக அமையும்.

நூறு ஆண்டுகள் மக்களின் மனதில் நீங்கா இடம் பெற்று, இன்றும் உலகம் எங்கும் கண்ணதாசனின் நூற்றாண்டு விழா சிறப்பாக அரங்கேறிக் கொண்டிருக்கிறது.
காவியத்தாயின் இளைய மகன் கவியரசு கண்ணதாசன் அவர்களைக் கொண்டாடவும், தமிழைப் போற்றவும், இலக்கியச்சுவையில் நனையவும் திரண்டு வாருங்கள்.

நிகழ்ச்சியின் இறுதியில் அனைவருக்கும் தேநீர் விருந்து வழங்கப்படும் என்று ஏற்பாட்டுக் குழுவின் கூறினர்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset