நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

கூச்சிங், கோத்தா சமாராஹான் பகுதிகளில் காற்றின் தரக்குறியீடு ஆரோக்கியமற்ற நிலையில் பதிவு 

கூச்சிங்: 

சரவாக் மாநிலத்தில் உள்ள கூச்சிங், கோத்தா சமாராஹான் ஆகிய பகுதிகளில் இன்று காலை 8.30 மணிவரை காற்றின் தரக்குறியீடு ஆரோக்கியமற்ற நிலையில் பதிவாகியிருப்பதாக IPU கண்காணிப்பு முகமை தெரிவித்தது 

கூச்சிங்கில் 117ஆகவும் கோத்தா சமரஹானில் 116ஆகவும் காற்றின் தரக்குறியீடு பதிவு செய்யப்பட்டுள்ளது. 

நாடு முழுவதும் 62 இடங்களில் காற்றின் தரம் மிதமான ஆரோக்கியமற்ற நிலையில் உள்ள வேளையில் மலாக்கா, போர்டிக்சன் பகுதிகளில் காற்றின் தரம் 50ஆக பதிவு செய்யப்பட்டது. 

காற்றின் தரக்குறியீடு 101 முதல் 200 ஆரோக்கியமற்ற நிலை என்றும் 201 முதல் 300 வரை மிகுந்த ஆரோக்கியமற்ற நிலை என்றும் 401-500 வரை அவசர நிலை என்றும் மதிப்பிடப்படுகிறது. 

நாட்டில் தற்போது நிலவி வரும் கடுமையான வெப்பம் காரணமாக ஆங்காங்கே காற்றின் தரம் மோசமாகியுள்ளது.

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset