நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

திரெங்கானு பெர்சத்து கட்சியின் மூன்று மூத்த தலைவர்கள் ராஜினாமா

மாராங்: 

திரெங்கானு மாநில பெர்சத்து கட்சி அதன் மூன்று மூத்த தலைவர்களை இழந்துள்ளது. 
 
அவ்வகையில் திரெங்கானு மாநில பெர்சத்து கட்சியின் தலைவராக பொறுப்பு வகித்து வந்த டத்தோ ரசாலி இட்ரிஸ் அந்த தலைமை பொறுப்பிலிருந்து விலகுவதாக அறிவித்தார். 

கடந்த 10 ஆண்டுகளாக தாம் வகித்து வந்த மாநில தலைவர் பதவியை ராஜினாமா செய்வதற்கான காரணத்தை அவர் வெளிப்படையாக தெரிவிக்கவில்லை. 

இந்நிலையில் தனது ராஜினாமா கடிதத்தை பெர்சத்து கட்சியின் தலைவர் டான்ஶ்ரீ முஹைடின் யாசினிடம் தாம் கொடுத்துவிட்டதாக ரசாலி உறுதிப்படுத்தினார்.

மாநில பொறுப்பில் இருந்து தாம் விலகினாலும் பெர்சத்து கட்சியில் தாம் தொடர்ந்து ஓர் உறுப்பினராக இருக்கிறேன் என்று அவர் சொன்னார். 

தொடர்ந்து தெலெமொங், உலு பெசுட் சட்டமன்ற உறுப்பினர்களான முஹம்மத் சவாவி இஸ்மாயில், முஹம்மத் உசைமி உசைன் இருவரும் பெர்சத்து கட்சியின் தகவல் பிரிவு தலைவர், பொருளாளர் பொறுப்பில் இருந்து விலகுவதாக அறிவித்தனர்.

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset