செய்திகள் சிந்தனைகள்
வீட்டை விட்டு வெளியே செல்லும் பெண்கள் - வெள்ளிச் சிந்தனை
வீட்டை விட்டு வெளியே செல்லும்போது இருவகை பெண்களை நாம் சந்திக்கலாம்.
1. குர்ஆன் கூறும் எகிப்து அமைச்சர் அஜீஸின் மனைவியைப் போன்று இச்சை நோய் பாதித்தவள். அவள் தன்னை அலங்கரித்து, நறுமணம் பூசி, அரைகுறை ஆடையுடன் நடக்கிறாள்.
அவள் மனமோ, "இதோ நான் இருக்கிறேன், வா” (12:23) என்று கூறுகிறது.
2. முக்காடு அணிந்து அடக்கத்துடன் வெளியே செல்லும் பெண். தேவைகளைப் பூர்த்தி செய்ய வெளியே செல்லுமாறு சூழ்நிலைதான் அவளை தள்ளுகிறது.
அவள் மனமோ, "எங்கள் தந்தை மிகவும் வயதானவராக இருக்கிறார். எனவே எங்கள் கால்நடைகளுக்குத் தண்ணீர் புகட்ட முடியவில்லை” (28:23) என்று கூறுகிறது.
எனவே முதல் வகையினருடன் யூசுஃப் நபியைப் போன்று நடந்து கொள்ளுங்கள். உங்கள் பார்வையைத் தாழ்த்தி, "அல்லாஹ் காப்பாற்ற வேண்டும்” (12:23) என்று கூறுங்கள்.
இரண்டாவது வகையினருடன் மூஸா நபியைப் போன்று நடந்து கொள்ளுங்கள். முடிந்தால் அவர்களுக்கு உதவுங்கள். இல்லையேல் கண்ணியத்துடன் ஒதுங்கிவிடுங்கள்.
கற்பொழுக்கம்தான் எகிப்தின் அதிபராக யூசுஃப் நபியை மாற்றியது.
ஓடிச் சென்று உதவும் குணம்தான், நல்ல மனைவியையும் தங்குமிடத்தையும் மூஸா நபிக்கு அளித்தது.
ஒரு பெண்ணுடைய ஆடை; அவளது தந்தையின் வளர்ப்பை, சகோதரனின் ரோஷத்தை, கணவனின் ஆண்மையை வெளிப்படுத்துகிறது.
அதனால்தான் தந்தையின்றி பிறந்த மகனை ஊர் மக்களிடம் மர்யம் (அலை) கொண்டுவந்தபோது அவர்கள்,
"ஹாரூனின் சகோதரியே! உன் தந்தை கெட்ட மனிதராய் இருக்கவில்லை; உன் தாயும் தீய நடத்தை கொண்டவளாய் இருக்கவில்லையே” (19:28) என்றனர்.
இங்கே ஊர் மக்கள் மர்யம் (அலை) அவர்களிடம், அவருடைய சகோதரர், தந்தை, தாய் ஆகியோரை நினைவூட்டுகின்றனர். ஏனெனில், பெற்றோருடைய வளர்ப்பில்தான் பெண் சீர் பெறுகிறாள்.
எனவே, பெற்றோர் கேவலப்படக்கூடாது என்று விரும்பும் பெண் அடக்கம் ஒடுக்கமாக நடந்துகொள்வாள். அவ்வளவுதான்! (இதில் அரசியல் கிடையாது!)
இந்த உலகில் தடை செய்யப்பட்ட பெரும்பாலானவற்றை சுவனத்தில் அல்லாஹ் அனுமதிக்கிறான்.
ஆனால் நிர்வாணத்தை மட்டும் அல்லாஹ் உலகிலும் சுவனத்திலும் தடை செய்துவிட்டான். ஏனெனில், அது எப்போதும் கேவலமே!
"நிச்சயமாக நீங்கள் இதில்பசியாகவோ நிர்வாணமாகவோ இருக்க மாட்டீர்கள்” (20:118) என்று குர்ஆன் கூறுகிறது.
இறைவா! கண்ணியத்துடனும் கற்புடனும் வாழ எங்களுக்கு உதவி புரிவாயாக!
நூஹ் மஹ்ழரி
தொடர்புடைய செய்திகள்
September 15, 2026, 12:01 am
நினைத்தது ஒன்று! நடந்தது வேறொன்று: பிரிக்ஸ் மாநாடு ஒரு கண்ணோட்டம்
September 11, 2026, 6:33 am
உடல் பருமன் என்பது வெறும் தோற்றப் பிரச்சனையா? - வெள்ளிச் சிந்தனை
September 4, 2026, 8:14 am
உலக வாழ்க்கையை அல்லாஹ் ஏன் தண்ணீருடன் ஒப்பிடுகிறான்? - வெள்ளிச் சிந்தனை
August 31, 2026, 12:36 pm
நேபாள் வெள்ளம் திட்டமிட்ட சதியா?
August 28, 2026, 7:29 am
பெண்களுக்கு கண்ணியம் வழங்கியவர் எவர்? - வெள்ளிச் சிந்தனை
August 21, 2026, 7:35 am
வாழ்க்கைக் கதைகள் நமக்குத் தரும் பாடங்கள் - வெள்ளிச் சிந்தனை
August 17, 2026, 9:49 am
தொப்பையால் ஆபத்து - ஆரோக்கிய சிந்தனை
August 14, 2026, 9:39 am
அப்பாஸிய சகாப்தம் மார்க்க அறிஞர்களை கௌரவித்த உன்னதமான காலகட்டம் - வெள்ளிச் சிந்தனை
August 7, 2026, 9:43 am
