செய்திகள் சிந்தனைகள்
பெண்களுக்கு கண்ணியம் வழங்கியவர் எவர்? - வெள்ளிச் சிந்தனை
பெஞ்சுகளில் அமர்ந்திருக்கும் பெண்களைப் பாருங்கள். அவர்கள் கைதிகள் அல்ல, ஏழைகள்.
இங்கிலாந்தில் விக்டோரியா மகாராணியின் காலத்தில்; பணமோ கணவனோ வேலையோ இல்லாத பெண்கள் இத்தகைய அநாதை இல்லங்களுக்கு அனுப்பப்படுவார்கள்.
அங்கு அவர்களின் வேலை: சணல் மற்றும் கயிறுகள் தயாரிப்பது, பழைய தார் பூசப்பட்ட கப்பல் கயிறுகளைத் தங்கள் வெறும் விரல்களால் கிழிப்பது.
விரல்களில் இரத்தம் வடியும், தார் அவர்களின் தோலைச் சுடும். ஆனாலும் தொடர்ந்து வேலை நடக்க வேண்டும். நிறுத்தினால் உணவு கிடைக்காது.
கறுப்பு உடை அணிந்து தடியுடன் இருக்கும் பெண் மேற்பார்வையாளர். வேலை செய்யும்போது யார் பேசினாலும் அவள் அடிப்பாள்.
காலை ஆறு மணி முதல் இரவு எட்டு மணி வரை மெளனமாக வேலை செய்யவேண்டும். சிறிய ஜன்னல் கொண்ட, குளிர்ச்சியான கல் மண்டபத்தில் அமர்ந்து, கயிறு தயாரிப்பது கடினம். ஆயினும் வேறு வழியில்லை. செய்தே தீரவேண்டும்.
அருகே ஆறு அல்லது ஏழு வயது குழந்தைகளும் இருப்பார்கள்.
1890-ல் லண்டனில், அநாதை இல்லங்களில் இருக்கும் குழந்தைகள்கூட வேலை செய்ய வேண்டும்.
ஒரு தாய் அநாதை இல்லத்தில் சேர்ந்தால், அவளுடைய குழந்தைகள் அவளிடமிருந்து பிரிக்கப்பட்டு வேறொரு அறைக்கு அனுப்பப்பட்டனர். ஞாயிற்றுக்கிழமைகளில் ஒரு மணி நேரம் மட்டுமே அவர்களைப் பார்க்க அவள் அனுமதிக்கப்பட்டாள்.
இரவில், ஐம்பது பேர் ஓர் அறையில், வைக்கோல் படுக்கையில், ஒவ்வொரு படுக்கையிலும் இருவர் என உறங்கினர்.
இரவு உணவாக நீர்த்த கஞ்சியும், பூஞ்சை பிடித்த ஒரு துண்டு ரொட்டியும் வழங்கப்படும்.
கணவன் இல்லை என்றால் அன்றைய பெண்களுக்கு இங்கிலாந்தில் பணமோ வீடோ சொந்தமில்லை.
இத்தகைய அநாதை இல்லங்கள் தெருவின் கடைக்கோடியில் இருக்கும்.
வெறும் 136 ஆண்டுகளுக்கு முன்பு, இத்தகைய நரகங்கள் பிரிட்டிஷ் பேரரசின் நடுவில் இருந்தன.
இதனால்தான் பிரிட்டன், உலகின் பெரும்பகுதியை கட்டுப்படுத்திய போதிலும்; உள்நாட்டு அவலத்தை கண்டுகொள்ளாத பேரரசு என்று அழைக்கப்படுகிறது.
1450 ஆண்டுகளுக்கு முன்பே பெண்களுக்கு இஸ்லாம் வழங்கிய கண்ணியத்தை எண்ணும்போது, நம்மை அறியாமலே ஒருமுறை 'அல்ஹம்து லில்லாஹ்’ - புகழனைத்தும் இறைவனுக்கே என்று சொல்லத் தோன்றுகிறது.
(ஆதாரம்: ஆலிவர் ட்விஸ்ட் - சார்லஸ் டிக்கன்ஸ்)
- நூஹ் மஹ்ழரி
தொடர்புடைய செய்திகள்
August 21, 2026, 7:35 am
வாழ்க்கைக் கதைகள் நமக்குத் தரும் பாடங்கள் - வெள்ளிச் சிந்தனை
August 17, 2026, 9:49 am
தொப்பையால் ஆபத்து - ஆரோக்கிய சிந்தனை
August 14, 2026, 9:39 am
அப்பாஸிய சகாப்தம் மார்க்க அறிஞர்களை கௌரவித்த உன்னதமான காலகட்டம் - வெள்ளிச் சிந்தனை
August 7, 2026, 9:43 am
வாழும் காலம் எல்லாம் தமிழுக்காகவே வாழ்ந்த இறையருட்கவிஞர் சீனி நைனா முகம்மது நினைவுநாள்
August 7, 2026, 7:17 am
வீட்டை விட்டு வெளியே செல்லும் பெண்கள் - வெள்ளிச் சிந்தனை
August 2, 2026, 6:46 am
இஸ்ரேலால் பழிவாங்கப்பட்ட ஸ்பெய்ன்
July 24, 2026, 9:25 am
