செய்திகள் சிந்தனைகள்
தொப்பையால் ஆபத்து - ஆரோக்கிய சிந்தனை
இன்றைய மருத்துவ உலகில் நாம் காணும் ஒரு முரண் நகை என்னவென்றால், மனித உடலைப்பற்றி பல ஆண்டுகள் படித்து பட்டம் பெற்ற மருத்துவர்களே, நாள்பட்ட வாழ்க்கை முறை நோய்களால் (Lifestyle Diseases) அதிகம் பாதிக்கப்படுகின்றனர்.
சில மருத்துவர்கள் ஒரு குறிப்பிட்ட துறையில் (Specialization) மட்டும் நிபுணத்துவம் பெற்றவர்களாக இருக்கிறார்கள் ஆனால், அதே மருத்துவத் துறையின் மற்ற அடிப்படைப் பிரிவுகள் பற்றியோ, ஊட்டச்சத்து பற்றியோ துளிக்கூட விழிப்புணர்வு இல்லாமல் இருக்கிறார்கள்.
இன்னும் சில மருத்துவர்களோ, தாங்களே ஏதேனும் ஒரு உடல்நலக் கோளாறுடன் போராடிக்கொண்டோ அல்லது அவற்றுக்கான சிகிச்சைகளை எடுத்துக்கொண்டோதான் வாழ்ந்து வருகின்றனர்.
நீரிழிவு (Diabetes), உடல் பருமன் (Obesity), கல்லீரல் கொழுப்பு நோய் (Fatty Liver Disease), இருதய நோய்கள் (Cardiovascular Diseases) மற்றும் புற்றுநோய் (Cancer) போன்ற நவீன கால நோய்கள் அனைத்துமே தவறான உணவுப் பழக்கத்தினாலும், சீரற்ற வாழ்க்கை முறையினாலும் போதிய உடலுழைப்பு இல்லாததனாலும் ஏற்படுகின்றன என்பதை உலகமே அறியும்.
ஆனால் இதில் உள்ள மிகப்பெரிய ஆச்சரியம் என்னவென்றால், உடலியக்கத்தைப் பற்றியும், உணவு மற்றும் வாழ்க்கை முறை (Lifestyle) பற்றியும் மிகத்தெளிவாகப் அறிந்திருக்க வேண்டிய மருத்துவத் துறையினரே இவ்வகை நோய்களால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர்.
எத்தனையோ மருத்துவர்கள் தங்களின் நீரிழிவு நோய்க்காகத் தொடர்ச்சியாக Metformin மாத்திரைகளை உட்கொள்கிறார்கள்.
எத்தனையோ மருத்துவர்கள் மன அழுத்தத்திற்கு (Depression) மருந்து எடுத்துக்கொள்கிறார்கள்.
சமூக வலைத்தளங்களில் மிகப்பிரபலமான ஒரு மகப்பேறு மருத்துவர் (Obstetrician ) நீண்டகாலமாக கடுமையான Fatty Liver Disease நோயால் பாதிக்கப்பட்டுள்ளது தொடர்பாக நான் வியந்ததுண்டு.
சில ஆண்டுகளாக எனக்குள்ளே ஒரு சந்தேகம் இருந்து வந்தது. மருத்துவத்துறையில் படித்து பட்டம் பெற்ற ஒருவரால், தமக்குள்ள Fatty Liver எனப்படும் கல்லீரல் கொழுப்பு நோயிலிருந்து பல வருடங்களாகியும் விடுபட முடியவில்லை என்றால் அதற்கு என்ன காரணம்?
இவருக்கு கல்லீரல் Fatty Liver Disease சம்மந்தமான போதிய அறிவியல் அறிவு இல்லையா?
அல்லது, அந்த நோயை உண்டாக்குவதற்கான மூலக் காரணம் (Root Cause) பற்றிய புரிதல் இல்லையா?
அல்லது, முறையான உடற்பயிற்சி, Stress Management, மற்றும், Hormone Regulation பற்றிய எந்தவித தெளிவும் இல்லையா?
இந்தக் கேள்விகளுக்கான விடைகளைத் தேடும்போதுதான், நவீன மருத்துவக் கல்வியில் ஊட்டச்சத்திற்கு (Nutrition) அளிக்கப்படும் மிகக்குறைந்த இடமும், வெறும் நோய்க்கு மருந்து கொடுக்கும் (Symptom Treatment) கல்வி முறையும் நமக்குப் புரியவருகிறது.
கல்லீரல் என்பது நமது உடலின் இரசாயனத் தொழிற்சாலை. நாம் உண்ணும் உணவைச் செரிப்பது, நச்சுக்களை நீக்குவது, ஆற்றலை சேமிப்பது என ஐநூறுக்கும் மேற்பட்ட வேலைகளை அது செய்கிறது.
ஆரோக்கியமான ஒரு கல்லீரலில் சிறிதளவு கொழுப்பு இருப்பது இயல்பு. ஆனால், கல்லீரலின் எடையில் 5 சதவீதத்திற்கு மேல் கொழுப்புச் சேர ஆரம்பித்தால், அதுவே Fatty Liver Disease என்று அழைக்கப்படுகிறது.
இந்த Fatty liver Disease இரண்டு வகை
1-Non Alcoholic Fatty Liver Disease அல்லது Metabolic Dysfunction-Associated Steatotic Liver Disease.
2- Alcohol-Associated Liver Disease.
முதலில் Alcohol- associated Liver Disease பற்றி பார்க்கலாம்.
நீங்கள் மது அருந்தும் போது கல்லீரலின் முதன்மையான வேலை உடலில் உள்ள நச்சுக்களை நீக்குவது (Detoxification) என்பதால், நீங்கள் குடிக்கும் Alcohol ஐ உடைத்து வெளியேற்றும் பொறுப்பு கல்லீரலையே சாரும்.
Alcohol கல்லீரலுக்குச் செல்லும்போது, அது Enzymes மூலம் Acetaldehyde மற்றும் Acetate ஆக மாற்றப்படுகிறது.
இந்தச் செயல்முறையின் போது கல்லீரலில் அதிகப்படியான ஹைட்ரஜன் மூலக்கூறுகளும், நச்சுத்தன்மையும் உற்பத்தியாகின்றன.
சாதாரணமாகக் கல்லீரல் கொழுப்பை எரிக்க வேண்டும். ஆனால் alcohol உடையும் போது உருவாகும் Chemical reaction களால் கல்லீரலால் கொழுப்பை எரிக்க முடியாமல் போய்விடுகிறது.
கல்லீரலில் கொழுப்புகள் உடைக்கப்படுவதற்குப் பதிலாக, அவை அப்படியே கல்லீரல் செல்களுக்குள்ளேயே தேங்கத் தொடங்குகின்றன.
இந்த நிலை தொடரும்போது கல்லீரலில் கடுமையான வீக்கம் (Alcoholic Hepatitis) ஏற்பட்டு, செல்கள் அழிந்து, இறுதியில் கல்லீரல் சுருங்கிப் போய்விடும் ஆபத்தான நிலை (Cirrhosis) உருவாகிறது.
மதுவே தொடாதவர்களுக்கும், சிறியவர்களுக்கும் கூட இன்று பெருமளவில் இந்தக் கல்லீரல் கொழுப்பு நோய் ஏற்படுகிறது.
இதற்கு முக்கியக் காரணம் தவறான உணவுப்பழக்கமும், சீரற்ற வாழ்க்கை முறையும்தான்.
நாம் உண்ணும் அரிசி, கோதுமை, துரித உணவுகள் மற்றும் குளிர்பானங்களில் உள்ள 'Fructose ‘ நேராகக் கல்லீரலுக்குச் செல்கிறது.
கல்லீரலால் இந்தச் சர்க்கரையை முழுமையாக உடனடியாகப் பயன்படுத்த முடியாவிட்டால், அது அந்தச் சர்க்கரையை உடனே 'Triglycerides எனப்படும் கொழுப்பாக மாற்றித் தன் இடத்திலேயே தேக்கி வைக்கிறது.
தொடர்ந்து கார்போஹைட்ரேட் அதிகம் உள்ள உணவுகளைச் சாப்பிட்டுக்கொண்டே இருக்கும்போது, இரத்தத்தில் சர்க்கரையின் அளவு அடிக்கடி உயர்கிறது.
அதைக் கட்டுப்படுத்தக் Pancreas அதிக இன்சுலினைச் சுரக்கிறது. காலப்போக்கில் உடல் செல்களுக்கு இன்சுலின் மீது உள்ள ஈர்ப்பு குறைந்துவிடுகிறது. அதை Insulin Resistance என்பார்கள்.
இரத்தத்தில் இன்சுலின் அளவு அதிகமாக இருக்கும்போது, உடல் கொழுப்பைக் கரைக்கும் வேலையை முழுமையாக நிறுத்திவிடும்.
மாறாக, இரத்தத்தில் சுற்றும் கொழுப்புகள் மற்றும் சர்க்கரையைத் தசைகளிலிருந்து விலக்கி, கல்லீரலுக்குள் அனுப்பிச் சேமித்து வைக்கும்படி தூண்டுகிறது. இதனால் கல்லீரலில் கொழுப்பு அடுக்கடுக்காகப் படிந்து விடுகிறது.
கல்லீரலில் கொழுப்பு அதிகமாகச் சேரும்போது அது கல்லீரல் செல்களை அழுத்தி, Oxidative Stress மற்றும் வீக்கத்தை ஏற்படுத்துகிறது.
இதுவே பின்னாளில் NASH எனப்படும் கடுமையான கல்லீரல் வீக்கமாக மாறி, கல்லீரல் திசுக்களைச் சேதப்படுத்துகிறது.
உடலில் கொழுப்பு (Fat) எங்கு சேமிக்கப்படுகிறது என்பது நமது மரபணுக்கள் (Genetics), ஹார்மோன்கள் மற்றும் பாலினத்தைப் (Gender) பொறுத்து மாறுபடும்.
அது உடலில் இரண்டு முக்கிய இடங்களில்தான் முதன்மையாகச் சேமிக்கப்படுகிறது:
தோலுக்கு கீழ் படியும் கொழுப்பு :(Subcutaneous Fat) அடிவயிறு (Belly), இடுப்புப் பகுதி, தொடைகள் (Thighs), பின்புறம் மற்றும் கைகளின் சதைப்பகுதி ஆகியவற்றில் இந்தத் தொங்கு சதை அல்லது சதைப்போக்கு வெளிப்படையாகத் தெரியும்.
அடுத்தது Visceral Fat:
இது வயிற்றுக்குள்ளே இருக்கும் கல்லீரல், குடல் போன்ற முக்கிய உறுப்புகளைச் சுற்றிக் காணப்படும் கொழுப்பு.
இது கல்லீரலையும் மற்ற உறுப்புகளையும் சுற்றிக் குவிவதால், கை கால்கள் மெலிந்திருந்தாலும் வயிறு இடுப்பு பகுதி மட்டும் பெரிதாகத் தொந்திக் கட்டியார் போல் (Belly Fat / Potbelly) வெளிப்படும்.
இந்த மகப்பேறு மருத்துவரின் பிரச்சனையும் அதுவே.
மூன்று வருடங்களுக்கு முன்னர் கண்டதை விட தற்சமயம் அவரது வயிற்றுப் பகுதியும் இடுப்பு பகுதியில் மிகவும் கொழுப்புக்கள் சேர்ந்து பார்ப்தற்கே ஆரோக்கியமற்ற நோயாளி போல காணப்படுகிறார்.
இந்த மூன்று வருட காலத்திலும் மருந்துவரான இவர் உடற்பயிற்சியில் ஒருமுறையேனும் ஈடுபட்டிருக்கவில்லை என்பது அதிர்ச்சியை அளிக்கிறது.
Fatty liver disease ஐ உணவு கட்டுப்பாடு மற்றும் உடற்பயிற்சி மூலம் குணப்படுத்தலாம் .
இருப்பினும் உணவு மற்றும் உடற்பயிற்சி மட்டும் தான் கல்லீரல் ஆரோக்கியத்தைத் தீர்மானிக்கின்றன என்பது பாதி உண்மை மட்டுமே.
ஒருவரின் மனநிலையும், Hormones சுரப்பும்தான் fatty liver disease ஐ தீர்மானிக்கும் காரணிகள்.
அதிலும் குறிப்பாக மன அழுத்தம் (Stress) மற்றும் எதிர்மறை எண்ணங்கள் (Negative Thoughts) கல்லீரலை நேரடியாகப் பாதிக்கின்றன.
இவர் படிக்கும் காலத்தில் இருந்தே பலவகைப்பட்ட மனவுளைச்சலுக்கு உள்ளாக்கப்பட்டவர்.
இவரது மருத்துவபீட மாணவ நண்பர்களுடன் பேசுகையில் அவர்கள் தெரிவித்த உண்மை என்னவெனில் இவர் மட்டக்களப்பில் இருந்து ஆகக் குறைந்ந வெட்டிப்புள்ளியுடன் “மட்டுமட்டாக” பல்கலை கழக அனுமதி பெற்று உள்ளே வந்தவர் என்று யாழ்ப்பாணத்து மாணவர்களால் தொடர்கேலிக்குள்ளாக்கப்பட்டதால் ஏற்பட்ட தாழ்வு மனப்பான்மை , அதனால் ஏற்பட்ட மனவுளைச்சல் அவரை இன்று வரை பாதிப்பதாக கூறினர்கள்.
அதனால் இந்த மகப்பேறு மருத்துவருக்கு யாழ்ப்பாணத்தவர்களை கண்டால் வெறுப்புக்களையும் ஆழ்மனதில் உள்ள வன்மங்களையும் ஆக்கிரோஷமாக வெளிக்காட்டும் நபர் அவர் என அவரின் நண்பர்கள் தெரிவித்தனர்.
நாம் தொடர்ச்சியான மன அழுத்தம், கவலை, அல்லது எதிர்மறை சிந்தனைகளில் ஆழ்ந்திருக்கும்போது, நமது உடலில் உள்ள Adrenaline சுரப்பிகள் Cortisol மற்றும் Adrenaline என்ற ஹார்மோன்களை அதிக அளவில் சுரக்கின்றன.
cortisol உடலில் குளுக்கோஸ் அளவை அதிகரிக்கச் செய்யும் போது இரத்தத்தில் சர்க்கரையின் அளவு திடீரென உயர்ந்து, Insulin சுரப்பு அதிகமாகும்.
இந்த அதிகப்படியான Insulin மற்றும் Cortisol இணை சேர்ந்து, இரத்தத்திலுள்ள கொழுப்புகளைக் கல்லீரலுக்குள் தள்ளி அங்கு கொழுப்புத் தேக்கத்தை பலமடங்கு துரிதப்படுத்துகின்றன.
நமது மூளைக்கும் கல்லீரலுக்கும் மிக நெருக்கமான நரம்பியல் தொடர்பு உண்டு. ஒருவருக்கு நாள்பட்ட மன அழுத்தம், கோபம், பயம் அல்லது எதிர்மறை எண்ணங்கள் இருக்கும்போது, உடல் தொடர்ச்சியான 'Fight or Flight' (போராடு அல்லது ஓடு) என்ற ஆபத்து நிலைக்குச் செல்கிறது.
இந்த நிலையில் உடல் தன்னைத் தற்காத்துக் கொள்ளச் சக்தியைச் சேமிக்க முயலும். இதன் விளைவாக, கல்லீரலின் இயல்பான நச்சு நீக்கும் (Detoxification) மற்றும் கொழுப்பு எரிக்கும் செயல்பாடு முடக்கப்படுகிறது.
இதனால் கல்லீரலில் நச்சுக்களும் கொழுப்பும் தேங்க ஆரம்பிக்கின்றன.
இந்த நிலைதான் இந்த மகப்பேறு மருத்துவருக்கு ஏற்பட்டிருக்கிறது.
நோயாளிகளை வாழவைக்க வேண்டிய மருத்துவர்களே தாங்களுக்கு பிடித்த நோய்களுடனும், பானை போன்ற தொந்தியுடனும், தளர்ந்த தேகத்துடனும் வலம் வரும்போது, எந்தவொரு விவேகமான மனிதனுக்கும் எழும் நியாயமான கேள்விதான் இது:
"தனது சொந்த ஆரோக்கியத்தையே பேணத் தெரியாத இந்த மருத்துவர், எப்படி மற்றவர்களுக்குச் சிகிச்சை அளிக்கப் போகிறார்?"
இது சமூக வலைத்தளங்களில் நாம் தினமும் காணும் ஒரு கசப்பான யதார்த்தம். அதிலும் குறிப்பாக, பிரபல முகநூல் மகப்பேறு மருத்துவர் (Obstetrician) இதற்கு சிறந்த எடுத்துக்காட்டு.
ஒரு மருத்துவர் ஆவது சாதாரண விஷயம் அல்ல.
MBBS முடித்து, அதன் பின் பல ஆண்டுகள் சிரமப்பட்டு சிறப்புப் பட்டப் படிப்பு (MD / MS) படித்துத் தேறும் இவர்களுக்கு மனித உடலியக்கம் பற்றிய அத்தனை அடிப்படையான தகவல்களும் தெரியும்.
செரிமான மண்டலம் (Digestive System), வளர்சிதை மாற்றம் (Metabolism), ஹார்மோன் சுரப்புகள், நரம்பு மண்டலம் என எல்லாவற்றையும் படித்துத்தான் அவர்கள் அந்த நிலைக்கு வந்திருக்கிறார்கள்.
அப்படியிருந்தும், அவர்களுக்கு "உடலைப் பேணிப் பாதுகாப்பது எப்படி?" அல்லது "சரியான ஊட்டச்சத்து (Nutrition) மற்றும் வாழ்க்கை முறை (Lifestyle) என்ன?" என்பது தெரியாமல் இருக்கிறதா?
அறிவு இல்லாமல் இல்லை; அறிவு இருக்கிறது, ஆனால் இதை practical ஆக நடைமுறைப்படுத்தத் தெரியவில்லை அல்லது அந்தப் பாதை அவர்களுக்குக் கற்றுக்கொடுக்கப்படவில்லை.
5 வருட மருத்துவப் படிப்பில் (Syllabus) அவர்களுக்குக் கற்றுக்கொடுக்கப்படுவதெல்லாம் நோயைக் கண்டறிவது எப்படி? அதற்கு எந்த இரசாயன மருந்தை (Pharmaceutical Drug) அல்லது அறுவை சிகிச்சையை (Surgery)ப் பயன்படுத்துவது என்பது மட்டும்தான்!
மற்றவர்களுக்குச் சொல்வதற்கு முன்பு, அதை உன்னில் வாழ்ந்து காட்டு" (Lead by Example) என்பார்கள்.
ஆனால், நோயாளிகளுக்கு Diet Chart எழுதிக்கொடுக்கும் பல மருத்துவர்கள், தங்களின் சொந்த வாழ்க்கையில் கடுமையான இன்சுலின் எதிர்ப்பு (Insulin Resistance), கல்லீரல் கொழுப்பு நோய் (Fatty Liver Disease) மற்றும் அதீத உடல் பருமன் (Obesity) ஆகியவற்றுடன் போராடிக்கொண்டிருக்கிறார்கள்.
வண்டியும் தொந்தியுமாக ஒரு மருத்துவர் தனது நோயாளியின் எதிரே அமர்ந்து கொண்டு, "உங்களுடைய கொழுப்புச்சத்தைக் குறைக்கவும், சர்க்கரையைத் தவிர்க்கவும்" என்று அறிவுரை கூறும்போது, அங்கே ஒரு முரண்பாடு பிறக்கிறது. எதிரே அமர்ந்திருக்கும் நோயாளி தன் மனதுக்குள் நினைப்பார்:
"உனக்கே உன் தொப்பையைக் குறைக்கத
வக்கில்லை, இந்த லட்சணத்தில் நீ எனக்கு மருத்துவம் பார்க்கப் போகிறாயா?"
இன்றைய நவீன மருத்துவக் கல்வியின் மிகப்பெரிய சாபக்கேடு என்னவென்றால், அது 'கற்றுக் கொடுத்த எல்லைக்குள்தான்' மருத்துவர்களைச் சுழல வைக்கிறது.
5 ஆண்டுகள் பல்கலைக்கழகங்கள் தரும் புத்தகங்களை (Syllabus) மனப்பாடம் செய்து, தேர்வுகளில் எழுதிப் பட்டம் பெற்றுவிட்டால், தாங்கள் உலக மகா அறிவாளிகள் என்று மருத்துவர்கள் நம்பத் தொடங்கிவிடுகிறார்கள்.
புத்தகத்திற்கு அப்பால் உள்ள உலகத்தைப் பார்க்க அவர்கள் மறுக்கிறார்கள். நவீன உணவு அறிவியல் (Nutritional Science), உணவு முறை மாற்றங்கள் (Dietary Interventions), மற்றும் இயற்கையான முறையில் உடலைச் சீரமைக்கும் வழிகள் (Holistic Healing) பற்றிப் பள்ளிகளிலோ கல்லூரிகளிலேயோ அவர்களுக்குச் சொல்லித் தருவதில்லை.
இந்தக் குறைபாடு அந்தப் பிரபல முகநூல் மகப்பேறு மருத்துவருக்கும் மிகச்சரியாகப் பொருந்துகிறது.
சமூக வலைத்தளங்களில் பல்லாயிரக்கணக்கானோருக்கு அறிவுரை வழங்கும் இவரால், தன் சொந்தக் கல்லீரலில் படியும் கொழுப்பைக் கூடக் கரைக்க முடியவில்லை என்பது எவ்வளவு பெரிய முரண்!
இந்த முரண்பாடு வெளியில் இருந்து பார்ப்பவர்களுக்கு ஒரு நகைச்சுவையாகவோ அல்லது கேலிக்குரிய விஷயமாகவோ தெரியலாம். ஆனால், அந்த மருத்துவரின் மன நிலையை யோசித்துப் பார்த்தால் அது மிகக் கடுமையான மன உளைச்சலைத் தரும்.
தான் ஒரு பிரபல மருத்துவராக சமூகத்தில் வலம் வந்தாலும், தன் உடலைத் தன் கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்க முடியவில்லையே என்ற குற்ற உணர்ச்சி நாளுக்கு நாள் அவரை உள்ளுக்குள்ளேயே அரித்துத் தின்னும்.
நோயாளிகள் யாரும் தன்னை மனதில் கேலி செய்கிறார்களோ என்ற தாழ்வு மனப்பான்மை ஏற்படும்.
இந்தத் தொடர்ச்சியான மன அழுத்தம் (Stress) உடலில் 'Cortisol ஹார்மோனை இன்னும் அதிகமாகச் சுரக்கச் செய்யும்.
Cortisol அதிகரிப்பதால், கல்லீரலில் கொழுப்புத் தேக்கம் இன்னும் பலமடங்கு அதிகமாகுமே தவிர குறையாது! அதாவது, தனது நோய்க்கான மூலக் காரணத்தையே (Root Cause) தனது மன அழுத்தமும் அறியாமையும் மேலும் மேலும் வளர்த்து விடுகின்றன.
மருத்துவம் படித்ததனால் மட்டுமே ஒருவன் ஆரோக்கியமானவன் ஆகிவிட முடியாது' என்பதற்கு இந்தச் சமூக வலைத்தள மகப்பேறு மருத்துவர் ஒரு சிறந்த உதாரணம்.
தங்களைக் காத்துக்கொள்ளத் தெரியாதவர்கள், எப்படிக் கைக்குழந்தைகளையும் தாய்மார்களையும் காப்பார்கள்?
- முகிந்தன் துரைராஜசிங்கம்
தொடர்புடைய செய்திகள்
August 21, 2026, 7:35 am
வாழ்க்கைக் கதைகள் நமக்குத் தரும் பாடங்கள் - வெள்ளிச் சிந்தனை
August 14, 2026, 9:39 am
அப்பாஸிய சகாப்தம் மார்க்க அறிஞர்களை கௌரவித்த உன்னதமான காலகட்டம் - வெள்ளிச் சிந்தனை
August 7, 2026, 9:43 am
வாழும் காலம் எல்லாம் தமிழுக்காகவே வாழ்ந்த இறையருட்கவிஞர் சீனி நைனா முகம்மது நினைவுநாள்
August 7, 2026, 7:17 am
வீட்டை விட்டு வெளியே செல்லும் பெண்கள் - வெள்ளிச் சிந்தனை
August 2, 2026, 6:46 am
இஸ்ரேலால் பழிவாங்கப்பட்ட ஸ்பெய்ன்
July 24, 2026, 9:25 am
உங்கள் ஒவ்வொரு அசைவும் இயந்திரங்களால் கண்காணிக்கப்படும்போது... வெள்ளிச்சிந்தனை
July 3, 2026, 8:22 am
