செய்திகள் மலேசியா
எம்ஏசிசி வழக்கு: இஸ்மாயில் சப்ரி மீது நாளை கோலாலம்பூர் செஷன்ஸ் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்படும்
புத்ராஜெயா:
முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் மீது நாளை கோலாலம்பூர் செஷன்ஸ் நீதிமன்றத்தில் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையச் சட்டத்தின் கீழ் குற்றச்சாட்டு பதிவு செய்யப்படும்.
நீதிமன்ற அமைப்பை மறுஆய்வு செய்ததன் அடிப்படையில், பெரா நாடாளுமன்ற உறுப்பினருக்கு எதிரான குற்றச்சாட்டு, காலை 9 மணிக்கு நீதிபதி சுசானா ஹுசைன் முன்னிலையில் வாசிக்கப்படும்.
இஸ்மாயில் சப்ரிக்கு எதிரான வழக்கு, அவரது சொத்து அறிவிப்பு தொடர்பானது என்று நம்பப்படுகிறது.
முன்னதாக, ஊழல் தடுப்பு ஆணையத்திடம் (எம்ஏசிசி) அவர் அளித்த சொத்து அறிவிப்புகள் தொடர்பான பதிவு அமர்வுகளுக்காக இஸ்மாயில் சப்ரி பலமுறை அழைக்கப்பட்டிருந்தார்.
அவருக்கு எதிரான ஊழல், பணமோசடி வழக்கு தொடர்பான விசாரணையின் ஒரு பகுதியாக எம்ஏசிசி பல்வேறு வெளிநாட்டு நாணயங்களில் 170 மில்லியன் ரிங்கிட் ரொக்கப் பணத்தையும், 7 மில்லியன் ரிங்கிட் மதிப்புடையதாக மதிப்பிடப்பட்ட 16 கிலோகிராம் தூய தங்கக் கட்டிகளையும் பறிமுதல் செய்தது.
பிப்ரவரி 2025இல் கைது செய்யப்பட்ட இஸ்மாயில் சப்ரியின் நான்கு மூத்த அதிகாரிகள் மீதான விசாரணையின் விளைவாக, 'பாதுகாப்பு இல்லம்' என்று நம்பப்படும் அவரது இல்லம், அலுவலகத்தில் நடத்தப்பட்ட சோதனையின் போது இந்தப் பறிமுதல் மேற்கொள்ளப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
August 6, 2026, 5:44 pm
ஜொகூர், நெகிரி செம்பிலானில் BN வெற்றி: ஒற்றுமை அரசாங்கத்திற்கு பாதிப்பில்லை
August 6, 2026, 5:18 pm
நெகிரி செம்பிலான் ஆட்சிக்குழு உறுப்பினர்கள் பதவியேற்பு விழா நாளை நடைபெறும்
August 6, 2026, 3:51 pm
வகுப்பறையில் ஆசிரியர் முன் மாணவன் புகைப்பிடித்த சம்பவம்: நெட்டிசன்கள் கண்டனம்
August 6, 2026, 3:40 pm
