நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

திவேட் இரண்டாம் நிலை கல்வித் திட்டம் அல்ல; திவேட் கல்வித் திட்டங்களுக்கு நிலையான அலவன்ஸ் வழங்கப்பட வேண்டும்: டத்தோ மூர்த்தி

கோலாலம்பூர்:

திவேட் கல்வித் திட்டங்களுக்கு நிலையான அலவன்ஸ் வழங்கப்பட வேண்டும்.

கக்பிம் எனப்படும் மலேசிய இந்திய தொழில் திறன் கல்வி மைய கூட்டமைப்பின் தலைவர் டத்தோ மூர்த்தி கூறினார்.

மலேசிய இந்திய தொழில் திறன் கல்வி மைய கூட்டமைப்பின் ஆண்டுக் கூட்டம் இன்று நடைபெற்றது.

தொழில் திறன் மேம்பாட்டு இலாகாவின் தலைமை இயக்குநர் டாக்டர் கமாருஷமான் இக்கூட்டத்தை தொடக்கி வைத்தார்.

அதே வேளையில் திறன் மேம்பாட்டு நிதி நிறுவனத்தின் பிரதிநிதி இக்கூட்டத்தை நிறைவு செய்து வைத்தார்.

நாடு முழுவதும் 50க்கும் மேற்பட்ட தொழில் திறன் கல்வி மையங்களை நடத்தி வருபவர்கள் இக்கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்தில் பல்வேறு விவகாரங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது.
குறிப்பாக ஒரு சில தொழில் திறன் கல்வித் திட்டங்களுக்கான அலவன்ஸ் 800 ரிங்கிட்டில் இருந்து 400 ரிங்கிட்டாக குறைக்கப்பட்டுள்ளது.

தற்போதைய வாழ்க்கை செலவினங்களுக்கு மத்தியில் இந்த தொகை குறைக்கப்பட்டது மாணவர்களுக்கு பெரும் சுமையாக மாறி உள்ளது.

ஆகவே அனைத்து கல்வி திட்டங்களுக்கும் நிலையான அலவன்ஸ் வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையும் முன்வைக்கப்பட்டது.

இது தவிர தொழில் திறன் கல்வி என்பது இரண்டாம் நிலை கல்வி திட்டம் அல்ல. இந்த தவறான கண்ணோட்டத்தில் இருந்து அனைவரும் ஈடுபட வேண்டும்.

காரணம் தொழில் திறன் கல்வியை பயிலும் மாணவர்களுக்கு மிகச்சிறந்த எதிர்காலம் காத்துக் கொண்டிருக்கிறது.

ஆக மாணவர்களும் பெற்றோர்களும் இந்த விவகாரத்தில் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டுமென டத்தோ மூர்த்தி கேட்டுக் கொண்டார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset