செய்திகள் மலேசியா
நெகிரி செம்பிலான் ஆட்சிக்குழு உறுப்பினர்கள் பதவியேற்பு விழா நாளை நடைபெறும்
சிரம்பான்:
நெகிரி செம்பிலான் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர்கள் பதவியேற்பு விழா நாளை நடைபெறவுள்ளது.
மாநில ஆட்சியாளர் TUANKU MUHRIZ TUANKU MUNAWIR முன்னிலையில் அவர்கள் பதவியேற்றுக்கொள்வார்கள் என்று தெரிவிக்கப்பட்டது
நெகிரி மாநில ஆட்சிக்குழு உறுப்பினர்களின் பதவியேற்பு விழாவில் மாநில மந்திரி பெசார் இஸ்மாயில் லாசிம் கலந்து கொள்வார் என்று மாநில செயலாளர் அலுவலகம் உறுதிப்படுத்தியது
கடந்த ஞாயிற்றுக்கிழமை நெகிரி செம்பிலான் மாநிலத்தின் புதிய மந்திரி பெசாராக ஜுவாசே சட்டமன்ற உறுப்பினர் இஸ்மாயில் லாசிம் பதவியேற்று கொண்டார்.
நடந்து முடிந்த 16ஆவது நெகிரி செம்பிலான் மாநில தேர்தலில் தேசிய முன்னணி 18 இடங்களை வென்ற நிலையில் தேசிய கூட்டணி 7 இடங்களை வென்று மாநில அரசாங்கத்தை அமைத்தது
நம்பிக்கை கூட்டணி சார்பாக 11 இடங்கள் மட்டுமே வென்ற நிலையில் அதில் 9 தொகுதிகளை DAP கட்சி வென்றது
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
August 6, 2026, 5:44 pm
ஜொகூர், நெகிரி செம்பிலானில் BN வெற்றி: ஒற்றுமை அரசாங்கத்திற்கு பாதிப்பில்லை
August 6, 2026, 3:51 pm
வகுப்பறையில் ஆசிரியர் முன் மாணவன் புகைப்பிடித்த சம்பவம்: நெட்டிசன்கள் கண்டனம்
August 6, 2026, 3:40 pm
