செய்திகள் மலேசியா
15 ஆயிரம் வெளிநாட்டு தொழிலாளர்களின் விண்ணப்பங்களை உடனடியாக பரிசீலனை செய்யவும்: மனிதவள அமைச்சுக்கு பிரதமர் அன்வார் உத்தரவு
புத்ராஜெயா:
நாட்டின் முக்கியத் துறைகளில் நிலவும் கடுமையான தொழிலாளர் தேவையைப் பூர்த்தி செய்யும் வகையில், 15,000 வெளிநாட்டுத் தொழிலாளர்களின் விண்ணப்பங்களை உடனடியாகப் பரிசீலித்து துரிதப்படுத்துமாறு மனிதவள அமைச்சகத்திற்குப் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் உத்தரவிட்டுள்ளார்.
இது தொடர்பாக அமைச்சரவைக் கூட்டத்தில், வெளிநாட்டுத் தொழிலாளர் சேர்க்கை தொடர்பான நடப்புச் சிக்கல்கள் குறித்துக் விவாதிக்கப்பட்டு, அவை குறித்துக் கவனம் செலுத்தப்பட்டதாகத் தொடர்பு அமைச்சர் டத்தோஸ்ரீ ஃபஹ்மி ஃபட்ஸில் தெரிவித்தார்.
தொழிலாளர் பற்றாக்குறையால் பாதிக்கப்பட்டுள்ள துறைகளின் தேவைகளைப் பூர்த்தி செய்யவும், நாட்டின் பொருளாதார நடவடிக்கைகளுக்கு நேரடியாக ஆதரவளிக்கவும், முதற்கட்டமாக இந்த 15,000 வெளிநாட்டுத் தொழிலாளர் விண்ணப்பங்களை உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு பிரதமர் கேட்டுக்கொண்டுள்ளார்," என்று கூறினார்.
முன்னதாக, கடந்த ஜூலை 1 அன்று அமைச்சரவை பிறப்பித்த உத்தரவைத் தொடர்ந்து, வெளிநாட்டுத் தொழிலாளர் ஒதுக்கீடு நிர்வாகத்தின் முழுப் பொறுப்பையும் மனிதவள அமைச்சகம் ஏற்றுக்கொண்டதாக ஜூலை 6 அன்று மனிதவள அமைச்சர் டத்தோஸ்ரீ ஆர். ரமணன் அறிவித்திருந்தார்.
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
August 6, 2026, 5:44 pm
ஜொகூர், நெகிரி செம்பிலானில் BN வெற்றி: ஒற்றுமை அரசாங்கத்திற்கு பாதிப்பில்லை
August 6, 2026, 5:18 pm
நெகிரி செம்பிலான் ஆட்சிக்குழு உறுப்பினர்கள் பதவியேற்பு விழா நாளை நடைபெறும்
August 6, 2026, 3:51 pm
வகுப்பறையில் ஆசிரியர் முன் மாணவன் புகைப்பிடித்த சம்பவம்: நெட்டிசன்கள் கண்டனம்
August 6, 2026, 3:40 pm
