நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

நூருல் இசா தற்காலிக விடுப்பில் செல்கிறார்: கெஅடிலான் துணைத் தலைவருக்கான பொறுப்பை சைபுடின் கவனிப்பார்

கோலாலம்பூர்:

கெஅடிலான் மத்திய செயலவை அதன் துணைத் தலைவர் நூருல் இஸ்ஸா அன்வாருக்கு தற்காலிக விடுப்பு வழங்கியது.

அத்துடன் டத்தோஸ்ரீ சைபுடின் நசுதியோன் இஸ்மாயிலை இடைக்கால அடிப்படையில் துணைத் தலைவரின் கடமைகளை ஆற்ற நியமித்தது.

துணைத் தலைவத் பதவியிலிருந்து விலகுவதற்கான நூருல் இசா கடிதம் வழங்கினார்.

அவரின் விண்ணப்பித்தை மத்திய செயலவை பரிசீலித்த பின்னர், கட்சித் தலைமையின் கருத்துக்களைக் கேட்டறிந்த பின்னரும் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக கெஅடிலான் தகவல் பிரிவுத் தலைவர் டத்தோஸ்ரீ ஃபஹ்மி ஃபட்சில் தெரிவித்தார்.

நூருல் இசா, தலைமைத்துவத்தின் கருத்துக்களைக் கேட்டறிந்த பிறகு, 2026 தேசிய மாநாட்டிற்குப் பிறகு, பின்னர் அறிவிக்கப்படும் ஒரு தேதி வரை நூருல் இசாவிற்கு தற்காலிக விடுப்பு வழங்க மத்திய செயலவை ஒப்புக்கொண்டது.

டத்தோஸ்ரீ சைபுடின் நசுதியோன் அவரின் பொறுப்புகளை ஆற்றுவார்.

மேலும் கட்சியின் உதவித் தலைவர் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரியை கெஅடிலானின் தேர்தல் இயக்குநராக நியமிக்கப்பட்டார்.

அதே வேளையில் ஜொகூர், நெகிரி செம்பிலான் மாநிலத் தேர்தல்களின் முடிவுகளை மத்திய செயலவை ஏற்றுக் கொண்டு மதிப்பதாக ஃபஹ்மி கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset