செய்திகள் மலேசியா
பதிவு செய்யாத கிளினிக்கைத் திறந்த குற்றச்சாட்டு: முன்னாள் நம்பிக்கை கூட்டணி வேட்பாளர் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டார்
சிரம்பான்:
பதிவு செய்யப்படாத மருத்துவ கிளினிக்கைத் திறந்ததாக நெகிரி செம்பிலான் தேர்தலில் போட்டியிட்ட முன்னாள் நம்பிக்கை கூட்டணி வேட்பாளரும் அவர்தம் மனைவியும் இங்குள்ள சிரம்பான் செஷன்ஸ் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டனர்
இருப்பினும், அவர்கள் தங்களுக்கு எதிரான அனைத்து குற்றங்களையும் மறுத்து விசாரணை கோரினர்.
குற்றஞ்சாட்டப்பட்ட டாக்டர் அஸிஸுல் ஹக்கிம், அவரின் நூர் அமீரா ரஹ்மாட் இந்த குற்றத்தை மறுக்கும் வாக்குமூலத்தை நீதிபதி ஷஹ்ருல் ரிசால் முன்னிலையில் வழங்கினர்.
கடந்த ஜூலை 8ஆம் தேதி காலை 11.30 மணியளவில் செனாவாங்கில் உள்ள தாமான் பண்டார் எனும் இடத்தில் அவர்கள் இருவரும் இந்த குற்றத்தைப் புரிந்தனர்.
நிறுவனத்தின் இணை இயக்குநர்களாக இருந்த குற்றம் சாட்டப்பட்டவர்கள், 1998 ஆம் ஆண்டு தனியார் சுகாதார வசதிகள் மற்றும் சேவைகள் சட்டத்தின் பிரிவு 27-இன் கீழ் பதிவு செய்யப்படாமல் ஒரு தனியார் மருத்துவமனையை நடத்தி வந்தது கண்டறியப்பட்டது.
குற்றம் சாட்டப்பட்டவர், சட்டம் 586-இன் பிரிவு 4(1)-இன் விதிகளை மீறி, சட்டம் 586-இன் பிரிவு 5(2)(a)-இன் கீழ் ஒரு குற்றத்தைச் செய்தார்.
குற்றம் நிரூபிக்கப்பட்டால் குற்றஞ்சாட்டப்பட்டவர்களுக்கு 3 லட்சம் ரிங்கிட் வரை அபராதம் அல்லது ஆறு மாதங்கள் சிறை அல்லது இரண்டுமே விதிக்கப்படலாம்.
இந்த வழக்கின் விசாரணை எதிர்வரும் செப்டம்பர் 17ஆம் தேதி நீதிமன்றத்தால் செவிமடுக்கப்படும்.
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
August 11, 2026, 4:09 pm
பிரதமர் விரைவில் குணமடைய மக்கள் பிரார்த்தனை செய்ய வேண்டும்: ஜாஹித்
August 11, 2026, 4:08 pm
தாபோங் ஹாஜி தடயவியல் தணிக்கை அறிக்கை ஓராண்டுக்குள் முடிக்கப்பட வேண்டும்: மொஹைதின்
August 11, 2026, 3:10 pm
பாலியல் வல்லுறவு, ஆபாச வீடியோ வைத்திருந்தத கல்லூரி மாணவர் மீது நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டது
August 11, 2026, 2:33 pm
அரச குடும்பம் தொடர்பான தவறான பதிவு: சமூக ஆர்வலர் செஷன்ஸ் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டார்
August 11, 2026, 12:53 pm
