செய்திகள் மலேசியா
மலேசியாவில் நடைபெறும் பஹ்ரைன் பார்முலா 1 பந்தயம் பெரும் பொருளாதாரப் பலன்களைக் கொண்டு வரும்: பிரதமர்
புத்ராஜெயா:
இந்த அக்டோபர் மாதம் மலேசியாவின் சிப்பாங் அனைத்துலக பந்தய அரங்கில் நடைபெறும் பஹ்ரைன் பார்முலா 1 கிராண்ட் பிரி பந்தய ஏற்பாடு, அதிகரித்த சுற்றுலா, வேலை வாய்ப்புகள் மற்றும் வணிக நடவடிக்கைகள் மூலம் பெரும் பொருளாதாரப் பலன்களைக் கொண்டுவரும்.
இந்த உலகத் தரம் வாய்ந்த ஏற்பாடு, முதலீட்டாளர்களின் நம்பிக்கையை வலுப்படுத்தி, அதன் மூலம் விசிட் மலேசியா 2026க்கு உத்வேகம் அளிக்கும் என்று பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறினார்.
பந்தய ஏற்பாடுகள் சிறப்பாக நடைபெறுவதை உறுதி செய்வதில் சிங்கப்பூரின் அனுபவத்தையும் சிறந்த நடைமுறைகளையும் பெறுவதற்காக, சிங்கப்பூர் கிராண்ட் பிரி நிர்வாக இயக்குநர் மைக்கல் ரோச்சுடன் நடத்திய சந்திப்பின்போது ஆராயப்பட்ட விஷயங்களில் இதுவும் ஒன்றாகும்.
இந்த ஏற்பாடு சர்வதேசத் தரத்தை எட்டுவதோடு மட்டுமல்லாமல், ஒரு பிராந்திய மோட்டார்ஸ்போர்ட் மையமாக மலேசியாவின் நிலையை வலுப்படுத்தி, மக்களுக்கும் நாட்டின் பொருளாதாரத்திற்கும் பரவலான நன்மைகளைக் கொண்டுவருவதை உறுதிசெய்ய நாங்கள் உறுதியுடன் உள்ளோம் என்று அவர் நேற்று இரவு ஒரு முகநூல் பதிவில் கூறினார்.
சிப்பாங் பந்தய தளத்தில் நடைபெறும் நிகழ்வு நிர்ணயிக்கப்பட்ட தரநிலைகளைப் பூர்த்தி செய்வதை உறுதிசெய்ய, எப் 1 பந்தயங்களை வெற்றிகரமாக நடத்திய நாடுகளின் அனுபவங்களும் சிறந்த நடைமுறைகளும் ஒரு வழிகாட்டியாகப் பயன்படும் என்று டத்தோஶ்ரீ அன்வார் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
August 23, 2026, 9:23 pm
புகைமூட்டத்தால் ஆஸ்துமா, சுவாசக்குழாய் தொற்று பாதிப்புகள் கடுமையாக அதிகரித்துள்ளன
August 23, 2026, 9:22 pm
டொயோட்டா அல்பார்ட் காரில் ஆடவர் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார்
August 23, 2026, 8:43 pm
செந்தூல் வட்டாரங்களில் தேசியக் கொடியை வழங்கி தேசியப்பற்றை மிளிரச் செய்த டத்தோ சைமன் சுரேஷ்
August 23, 2026, 8:42 pm
