செய்திகள் மலேசியா
மானியமில்லா பெட்ரோல், டீசல் விலைகள் 5 சென் குறைந்தது
கோலாலம்பூர்:
மானியமில்லா ரோன் 97, ரோன் ரோன் 95 பெட்ரோல், டீசலின் சில்லறை விலைகள் நாளை முதல் 5 சென் குறையும்.
ரோன் 97 பெட்ரோல் ஒரு லிட்டர் 4.35 ரிங்கிட்க்கும், மானியமில்லா ரோன் 95 ஒரு லிட்டர் 3.77 ரிங்கிட்டிற்கும் விற்கப்படுகிறது.
அதே சமயம், மானியமில்லா டீசல் ஒரு லிட்டர் 4.57 ரிங்கிட்டிற்க்கு விற்கப்படுகிறது.
இந்த விலைகள் அனைத்தும் ஆகஸ்ட் 12 வரை அமலில் இருக்கும்.
இதற்கிடையில், மானிய விலையில் வழங்கப்படும் எரிபொருளின் விலையில் எந்த மாற்றமும் இல்லை.
பூடி 95 திட்டத்தின் கீழ் வழங்கப்படும் ரோன் 95 எரிபொருள் ஒரு லிட்டருக்கு RM1.99 என்ற விலையிலும், பூடி டீசல் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் டீசல் ஒரு லிட்டருக்கு 2.10 ரிங்கிட் என்ற விலையிலும் தொடர்ந்து விற்பனை செய்யப்படுகிறது.
மேலும், மானிய பெட்ரோல் கட்டுப்பாட்டு அமைப்பு மற்றும் மானிய டீசல் கட்டுப்பாட்டு அமைப்பு ஆகியவற்றின் மானிய விலைகளும் முறையே ஒரு லிட்டருக்கு 2.05 ரிங்கிட், 2.15 ரிங்கிட் என மாற்றமின்றி உள்ளன.
கடந்த வாரத்தில் உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலையில் ஏற்பட்ட மாற்றங்களால், மானியம் இல்லாத பெட்ரோலியப் பொருட்களின் விலையும் பாதிக்கப்பட்டது என்று அமைச்சு தெரிவித்துள்ளது.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
August 11, 2026, 4:09 pm
பிரதமர் விரைவில் குணமடைய மக்கள் பிரார்த்தனை செய்ய வேண்டும்: ஜாஹித்
August 11, 2026, 4:08 pm
தாபோங் ஹாஜி தடயவியல் தணிக்கை அறிக்கை ஓராண்டுக்குள் முடிக்கப்பட வேண்டும்: மொஹைதின்
August 11, 2026, 3:10 pm
பாலியல் வல்லுறவு, ஆபாச வீடியோ வைத்திருந்தத கல்லூரி மாணவர் மீது நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டது
August 11, 2026, 2:33 pm
அரச குடும்பம் தொடர்பான தவறான பதிவு: சமூக ஆர்வலர் செஷன்ஸ் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டார்
August 11, 2026, 12:53 pm
