செய்திகள் மலேசியா
கோவில் ஹராம் என்ற சொல்லைப் பயன்படுத்துவதை முழுமையாக நிறுத்தினால் அரசுக்கு ஆதரவு பெருகும்: மஹிமா
பத்துகேவ்ஸ்:
கோவில் ஹராம் என்ற சொல்லைப் பயன்படுத்துவதை முழுமையாக நிறுத்தினால் அரசுக்கு ஆதரவு பெருகும்.
மஹிமா தலைவர் டத்தோ ந. சிவக்குமார் இதனை கூறினார்.
முன்னர் அச்சொல்லை பயன்படுத்தியது குறித்து பிரதமர் மன்னிப்புக் கோரியதைத் தொடர்ந்து, அனைத்து அலுவல் ரீதியான விஷயங்களிலும் கோயில் ஹராம் என்ற சொல்லைப் பயன்படுத்துவதை நிறுத்த அரசு நடவடிக்கை எடுத்தால், மக்களிடமிருந்து பரந்த ஆதரவைப் பெறும்.
இந்த நடவடிக்கை, மத உணர்வைப் பேணுவதிலும், பல்லின, மத நல்லிணக்கத்தை வலுப்படுத்துவதிலும் அரசின் அர்ப்பணிப்பை நிரூபிக்கும்.
கோயில் ஹராம் என்ற சொல்லைப் பயன்படுத்துவதை நிறுத்த அரசு நடவடிக்கை எடுத்தால், பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் பொதுமக்களின் ஆதரவைப் பெறுவார்.
இந்த நடவடிக்கை, மத உணர்வையும் மக்களின் நல்லிணக்கத்தையும் பேணுவதில் அவரது தலைமைத்துவத்தைக் காட்டும். தவறுகளை ஒப்புக்கொண்டு பகிரங்கமாக மன்னிப்புக் கோரிய பிரதமரின் பெருந்தன்மையான, பணிவான அணுகுமுறையை மஹிமா பாராட்டுகிறது.
இந்த மன்னிப்பு இந்திய சமூகத்தினரின், குறிப்பாக இந்துக்களின் இதயங்களை நிச்சயமாகத் தொடுகிறது என்று அவர் இன்று ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.
இந்திய சமூகம் மன்னிப்பை மனப்பூர்வமாக ஏற்றுக்கொண்டது, ஆனால் எதிர்காலத்தில் இதே பிரச்சினை மீண்டும் ஏற்படாமல் இருப்பதை உறுதிசெய்ய, மேலும் உறுதியான தொடர் நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்.
குறிப்பாக, ஒரு குறிப்பிட்ட மதத்தைப் பின்பற்றுபவர்களால் புனிதமாகக் கருதப்படும் வழிபாட்டுத் தலங்கள் சம்பந்தப்பட்டிருக்கும்போது, மத உணர்வுகளைப் புண்படுத்தும் சொற்களைப் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும் என்று அவர் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
August 11, 2026, 3:10 pm
பாலியல் வல்லுறவு, ஆபாச வீடியோ வைத்திருந்தத கல்லூரி மாணவர் மீது நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டது
August 11, 2026, 2:33 pm
அரச குடும்பம் தொடர்பான தவறான பதிவு: சமூக ஆர்வலர் செஷன்ஸ் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டார்
August 11, 2026, 12:53 pm
டத்தாரான் காஜாங் மைதான சதுக்கம் இன்று தொடங்கி ஆகஸ்ட் 26ஆம் தேதி வரை தற்காலிகமாக மூடப்படுகிறது
August 11, 2026, 11:16 am
தபோங் ஹாஜியின் RCI அறிக்கையை விவாதிக்க மறுப்பு தெரிவித்து எதிர்க்கட்சியினர் வெளிநடப்பு
August 11, 2026, 10:45 am
தபோங் ஹாஜி RCI சிறப்பு மக்களவை கூட்டத்தில் பங்கேற்க முடியாதத்தற்கு பிரதமர் அன்வார் இப்ராஹிம் மன்னிப்பு
August 11, 2026, 9:18 am
