செய்திகள் மலேசியா
வாடிக்கையாளரின் மை கார்ட் அட்டையைத் தவறாக பயன்படுத்திய பெட்ரோல் நிலைய ஊழியருக்கு எட்டு மாதம் சிறை தண்டனை விதிப்பு
கோத்தா கினாபாலு:
புடி டீசல் உதவித்தொகை சலுகையைப் பெற வாடிக்கையாளரின் மை கார்ட் அடையாள அட்டையைத் தவறாக பயன்படுத்தியதாக பெட்ரொல் நிலைய ஊழியருக்கு எதிராக 8 மாதம் சிறை, 4 பிரம்படிகள் விதித்து இங்குள்ள லஹாட் டத்து நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
கடந்த வெள்ளிக்கிழமை அந்த நபர், ஒரு பெண் உட்பட அவரது இரண்டு சகாக்களுடன் கைது செய்யப்பட்டதாகவும், ஆனால் அவர்கள் இருவரும் அரசுத் தரப்பு சாட்சிகளாக ஆக்கப்பட்டதாகவும் லஹாட் காவல்துறைத் தலைவர் சுல்பஹரின் இஸ்மாயில் தெரிவித்தார்.
பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர் ஒருவரிடமிருந்து போலிஸ் புகார் கிடைக்கப்பெற்ற நிலையில் பாதிக்கப்பட்டவருக்கு தெரியாமல் 43.01 லிட்டரை பயன்படுத்தியதாக கூறப்படுகிறது.
அதனைத் தொடர்ந்து, காவல்துறை நடத்திய விசாரணையில், மானிய உதவிக்காக வாடிக்கையாளர்கள் தங்கள் மைக்காட் எண்ணைப் பயன்படுத்தி எரிபொருள் நிரப்ப வரும்போது, சந்தேக நபர் அவர்களின் மைக்காட் எண்ணைப் பதிவு செய்வதே அவரது செயல்முறையாக இருந்தது கண்டறியப்பட்டது.
எரிபொருள் வாங்குவதற்காகத் தங்களது மைக்காடை (MyKad) ஒப்படைக்கும்போது பொதுமக்கள் விழிப்புடன் இருக்குமாறும், புடி மடானி (BUDI Madani) மானியங்கள் தவறாகப் பயன்படுத்தப்படுவது குறித்துத் தகவல் தெரிந்தால் உடனடியாகக் காவல் நிலையத்தில் புகார் அளிக்குமாறும் அறிவுறுத்தப்படுகிறார்கள்
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
August 11, 2026, 4:09 pm
பிரதமர் விரைவில் குணமடைய மக்கள் பிரார்த்தனை செய்ய வேண்டும்: ஜாஹித்
August 11, 2026, 4:08 pm
தாபோங் ஹாஜி தடயவியல் தணிக்கை அறிக்கை ஓராண்டுக்குள் முடிக்கப்பட வேண்டும்: மொஹைதின்
August 11, 2026, 3:10 pm
பாலியல் வல்லுறவு, ஆபாச வீடியோ வைத்திருந்தத கல்லூரி மாணவர் மீது நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டது
August 11, 2026, 2:33 pm
அரச குடும்பம் தொடர்பான தவறான பதிவு: சமூக ஆர்வலர் செஷன்ஸ் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டார்
August 11, 2026, 12:53 pm
