செய்திகள் மலேசியா
தபோங் ஹாஜி RCI அரச விசாரணை அறிக்கை குறித்து சிறப்பு கலந்துரையாடல்: தேசிய முன்னணி நடத்துகிறது
கோலாலம்பூர்:
தபோங் ஹாஜியின் அரச விசாரணை அறிக்கை ஆணையத்தின் அறிக்கை குறித்து விவாதிப்பதற்காக, தேசிய முன்னணி வரும் திங்கட்கிழமை ஒரு சிறப்பு விளக்கக் கூட்டத்தை நடத்தும்.
தபோங் ஹாஜி வாரியத்தின் மீதான RCI அறிக்கைகள் குறித்து எதிர்வரும் 11ஆம் தேதி ஆகஸ்ட் மாதம் சிறப்பு மக்களவை கூட்டத்தில் தாக்கல் செய்யப்பட்டு விவாதம் நடத்தப்படவிருக்கிறது.
இந்த சிறப்பு விளக்கக் கூட்டத்தில் தேசிய முன்னணி தலைவர் டத்தோஶ்ரீ அஹ்மத் ஸாஹித் ஹமிடி கலந்து கொள்ளவுள்ளார். இந்த சந்திப்பு டேவான் துன் டாக்டர் இஸ்மாயில், புத்ரா உலக வாணிப மையத்தில் நடைபெறவுள்ளது.
மேலும் சிறப்பு விளக்க கூட்டத்தில் கலந்து கொள்ள டான்ஶ்ரீ எஸ்.ஏ. விக்னேஸ்வரன், டத்தோஶ்ரீ டாக்டர் வீ கா சியோங், டத்தோஶ்ரீ அர்துர் ஜோசப் ஆகிய தலைவர்களுக்கும் விடுக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, தபோங் ஹாஜி வாரியத்தின் RCI அறிக்கை குறித்து சிறப்பு மக்களவை கூட்டத்தில் விவாதிக்கப்படும் என்று பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறியிருந்தார்
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
August 11, 2026, 4:09 pm
பிரதமர் விரைவில் குணமடைய மக்கள் பிரார்த்தனை செய்ய வேண்டும்: ஜாஹித்
August 11, 2026, 4:08 pm
தாபோங் ஹாஜி தடயவியல் தணிக்கை அறிக்கை ஓராண்டுக்குள் முடிக்கப்பட வேண்டும்: மொஹைதின்
August 11, 2026, 3:10 pm
பாலியல் வல்லுறவு, ஆபாச வீடியோ வைத்திருந்தத கல்லூரி மாணவர் மீது நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டது
August 11, 2026, 2:33 pm
அரச குடும்பம் தொடர்பான தவறான பதிவு: சமூக ஆர்வலர் செஷன்ஸ் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டார்
August 11, 2026, 12:53 pm
