செய்திகள் மலேசியா
சரவாக் மாநில பிரிமியருடன் மாமன்னர் சுல்தான் இப்ராஹிம் சந்திப்பு நடத்தினார்
கோலாலம்பூர்:
சரவாக் மாநில பிரிமியர் டான்ஶ்ரீ அபாங் ஜொஹாரி துன் ஒப்பெங்கை மாமன்னர் சுல்தான் இப்ராஹிம் சுல்தான் இஸ்கண்டார் ஜொகூரில் உள்ள இஸ்தானா பாசீர் பெலாங்கியில் சந்தித்தார்.
மாமன்னருடன் நடைபெற்ற இந்த சந்திப்பு ஒரு மணிநேரம் வரை நீட்டிக்கப்பட்டதாக சுல்தான் இப்ராஹிம் சுல்தான் இஸ்கண்டார் தனது அதிகாரப்பூர்வ முகநூல் பக்கத்தில் தெரிவித்தார்.
இந்த சந்திப்பில் ஜொகூர் மாநில மந்திரி பெசார் டத்தோ ஓன் ஹாஃபிஸ் காசி, சரவாக் மாநில செயலாளர் டத்தோ அமார் முஹம்மத் அபு பக்கார், ஜொகூர் மாநில நிதி அதிகாரி டத்தோ முஹம்மத் நூரஸாம் ஒஸ்மான் ஆகியோர் கலந்து கொண்டனர்.
முன்னதாக, சரவாக் மாநில பிரிமியரை சந்தித்ததாக கூறப்படும் புகைப்படத்தை மாமன்னர் சுல்தான் இப்ராஹிம் சுல்தான் இஸ்கண்டார் வெளியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
August 11, 2026, 4:09 pm
பிரதமர் விரைவில் குணமடைய மக்கள் பிரார்த்தனை செய்ய வேண்டும்: ஜாஹித்
August 11, 2026, 4:08 pm
தாபோங் ஹாஜி தடயவியல் தணிக்கை அறிக்கை ஓராண்டுக்குள் முடிக்கப்பட வேண்டும்: மொஹைதின்
August 11, 2026, 3:10 pm
பாலியல் வல்லுறவு, ஆபாச வீடியோ வைத்திருந்தத கல்லூரி மாணவர் மீது நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டது
August 11, 2026, 2:33 pm
அரச குடும்பம் தொடர்பான தவறான பதிவு: சமூக ஆர்வலர் செஷன்ஸ் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டார்
August 11, 2026, 12:53 pm
