செய்திகள் மலேசியா
மோசடி, சூதாட்ட உள்ளடக்கங்களைத் தானாகவே நீக்குவதற்கு சமூக ஊடகத் தளங்களுக்கு அவகாசம் வழங்கப்பட்டுள்ளது: ஃபஹ்மி
கோலாலம்பூர்:
மோசடி, சூதாட்ட உள்ளடக்கங்களைத் தானாகவே நீக்குவதற்கு சமூக ஊடகத் தளங்களுக்கு அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
தகவல் தொடர்பு அமைச்சர் ஃபஹ்மி ஃபட்சில் இதனை கூறினார்.
மோசடி, இணைய சூதாட்டம் தொடர்பான அபாயகரமான உள்ளடக்கங்களை தானாகவே அகற்றுவதை உறுதி செய்வதற்காக, சமூக ஊடகத் தள இயக்குநர்கள் தத்தமது உள் பொறிமுறைகளை ஒருங்கிணைக்க அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
இணையப் பாதுகாப்புச் சட்டம் 2025இன் கீழ் உள்ள குழந்தை பாதுகாப்பு நெறிமுறை, இடர் குறைப்பு நெறிமுறை ஆகியவற்றின் தேவைகளுக்கு இணங்குவதற்குத் தள இயக்குநர்கள் தங்கள் விருப்பத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.
நாங்கள் இந்தத் தளங்களுக்குச் சிறிது அவகாசம் அளிக்கிறோம். அவர்கள் இணங்குவதற்கான தங்கள் விருப்பத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.
ஆனால் அடையாளம் காணப்பட்ட உள்ளடக்கத்தை அகற்றும் செயல்முறையைத் தானியக்கமாக்குவதற்காகத் தங்கள் உள் பொறிமுறைகளை ஒருங்கிணைக்க அவர்களுக்குச் சிறிது அவகாசம் தேவைப்படுகிறது.
குறிப்பாக இணைய சூதாட்டம், மோசடிகள் தொடர்பான உள்ளடக்கங்களை அகற்றுமாறு எம்சிஎம்சி விடுத்த கோரிக்கைகள், கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு எண்ணிக்கையை அதிகரித்துள்ளதைத் தொடர்ந்து, அபாயகரமான உள்ளடக்கங்களைத் தானாகவே அகற்ற வேண்டியதன் அவசியம் முக்கியத்துவம் பெறுகிறது.
வாராந்திர செய்தியாளர் சந்திப்பில் அவர் இவ்வாறு கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
August 11, 2026, 3:10 pm
பாலியல் வல்லுறவு, ஆபாச வீடியோ வைத்திருந்தத கல்லூரி மாணவர் மீது நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டது
August 11, 2026, 2:33 pm
அரச குடும்பம் தொடர்பான தவறான பதிவு: சமூக ஆர்வலர் செஷன்ஸ் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டார்
August 11, 2026, 12:53 pm
டத்தாரான் காஜாங் மைதான சதுக்கம் இன்று தொடங்கி ஆகஸ்ட் 26ஆம் தேதி வரை தற்காலிகமாக மூடப்படுகிறது
August 11, 2026, 11:16 am
தபோங் ஹாஜியின் RCI அறிக்கையை விவாதிக்க மறுப்பு தெரிவித்து எதிர்க்கட்சியினர் வெளிநடப்பு
August 11, 2026, 10:45 am
தபோங் ஹாஜி RCI சிறப்பு மக்களவை கூட்டத்தில் பங்கேற்க முடியாதத்தற்கு பிரதமர் அன்வார் இப்ராஹிம் மன்னிப்பு
August 11, 2026, 9:18 am
