செய்திகள் மலேசியா
ரோக்கி இழுத்துச் செல்லப்பட்டு, தாக்கப்படும் காணொலி; எஸ்ஓபி பின்பற்றப்படவில்லை என்பதை நிரூபிக்கிறது: வழக்கறிஞர்
கிள்ளான்:
ரோக்கி இழுத்துச் செல்லப்பட்டு, தாக்கப்படும் காணொலி எஸ்ஓபி பின்பற்றப்படவில்லை என்பதை நிரூபிக்கிறது.
விலங்குரிமை ஆர்வலரும் வழக்கறிஞருமான ராஜேஷ் நாகராஜன் இதனை கூறினார்.
கிள்ளான் மாநகர் மன்றம் நடத்திய ஒரு நடவடிக்கையின் போது, ரோக்கி என்ற வளர்ப்பு நாய் இழுத்துச் செல்லப்பட்டுத் தாக்கப்பட்டது.
இது தொடர்பான வைரலான காணொளிக் காட்சி, நிர்ணயிக்கப்பட்ட நிலையான செயல்பாட்டு நடைமுறைக்கு (எஸ்ஓபி) முரணாக இருப்பதாகக் கூறப்படுகிறது.
இந்தச் சம்பவம், குறிப்பாக இந்த நடவடிக்கை நிலையான செயல்பாட்டு நடைமுறைக்கு இணங்கவே மேற்கொள்ளப்பட்டது என்று கிள்ளான் மேயர் வெளியிட்ட அறிக்கை, தனது கட்சிக்கு ஏமாற்றமளிப்பதாகக் கூறினார்.
அது உண்மையாகவே பின்பற்றப்பட்டிருந்தால், ரோக்கி கொல்லப்பட்டது சரி என்பது போலத் தோன்றும், ஆனால் இதில் எந்த அர்த்தமும் இல்லை.
எஸ்ஓபியில் பயன்படுத்தப்படும் வளையம் உலோகத்தால் ஆனதாக இல்லாமல் கயிற்றால் ஆனதாக இருக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது.
இருந்த போதிலும், ரோக்கி இழுத்துச் செல்லப்பட்டு தாக்கப்படுவதை வீடியோ காட்சியில் நாமே பார்க்கலாம்.
இதில் எஸ்ஓபி தெளிவாகப் பின்பற்றப்படவில்லை. மேலும் அந்த நாய் துன்புறுத்தப்பட்டது என்று அவர் கூறினார்.
முன்னதாக அவரும் விலங்குகள் ஆர்வலர்கள் உட்பட 70க்கும் மேற்பட்டோரும், இன்று மாலை இங்குள்ள கிள்ளான் மாநகர் மன்றம் கட்டிட வளாகத்திற்கு வெளியே இந்தப் பிரச்சினை தொடர்பாக நடைபெற்ற அமைதியான பேரணியில் பங்கேற்றனர்.
எஸ்ஓபி நகல் தன்னிடம் இருப்பதாகவும், அது சிறிதும் பின்பற்றப்படவில்லை என்றும் ராஜேஷ் நம்பிக்கையுடன் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
August 11, 2026, 4:09 pm
பிரதமர் விரைவில் குணமடைய மக்கள் பிரார்த்தனை செய்ய வேண்டும்: ஜாஹித்
August 11, 2026, 4:08 pm
தாபோங் ஹாஜி தடயவியல் தணிக்கை அறிக்கை ஓராண்டுக்குள் முடிக்கப்பட வேண்டும்: மொஹைதின்
August 11, 2026, 3:10 pm
பாலியல் வல்லுறவு, ஆபாச வீடியோ வைத்திருந்தத கல்லூரி மாணவர் மீது நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டது
August 11, 2026, 2:33 pm
அரச குடும்பம் தொடர்பான தவறான பதிவு: சமூக ஆர்வலர் செஷன்ஸ் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டார்
August 11, 2026, 12:53 pm
