செய்திகள் மலேசியா
2026 அம்னோவின் பொதுப்பேரவை செப்டம்பர் 9 முதல் 12ஆம் தேதி வரை நடைபெறும்
கோலாலம்பூர்:
2026 அம்னோவின் பொதுப்பேரவை செப்டம்பர் 9 முதல் 12ஆம் தேதி வரை புத்ரா உலக வாணிப மையத்தில் நடைபெறும் என்று அக்கட்சியின் கௌரவ செயலாளர் டத்தோ டாக்டர் அஷ்ராஃப் வஜ்டி டுசுக்கி கூறினார்.
அம்னோவின் தேசிய தலைவர் உரையுடன் செப்டம்பர் 9ஆம் தேதி அம்னோ பொதுப்பேரவை அதிகாரப்பூர்வர்மாக தொடங்குகிறது.
தொடர்ந்து மகளிர், இளைஞர் பிரிவு, புத்ரி, புத்ரா பிரிவுகளின் ஆண்டுக்கூட்டமும் நடத்தப்படும் என்று அவர் தெரிவித்தார்.
சகோதரத்துவத்தையும் ஒற்றுமையையும் வலுப்படுத்தவும், உறுதியைப் புதுப்பிக்கவும், தற்போதைய சவால்களை எதிர்கொள்வதில் அனைத்துக் கட்சி உறுப்பினர்களின் அர்ப்பணிப்பை உறுதிப்படுத்தவும் PAU 2026 சிறந்த களமாக அமையும் என நம்புவதாகக் கூறினார்.
அம்னோவை வலிமைமிக்க கட்சியாகவும் மீண்டும் மலாய்- பூமிபுத்ராக்களின் ஆதரவு பெற்ற கட்சியாக கொண்டு வர இந்த பொதுப்பேரவை சிறந்த தளமாக அமையும் என்று நம்பப்படுகிறது.
ஜொகூர், மற்றும் நெகிரி செம்பிலான் மாநில தேர்தலில் தேசிய முன்னணி மகத்தான் வெற்றிகளைப் பெற்றுள்ள நிலையில் 2026 அம்னோவின் பொதுப்பேரவை முக்கியத்துவம் வாய்ந்துள்ளது.
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
August 11, 2026, 4:09 pm
பிரதமர் விரைவில் குணமடைய மக்கள் பிரார்த்தனை செய்ய வேண்டும்: ஜாஹித்
August 11, 2026, 4:08 pm
தாபோங் ஹாஜி தடயவியல் தணிக்கை அறிக்கை ஓராண்டுக்குள் முடிக்கப்பட வேண்டும்: மொஹைதின்
August 11, 2026, 3:10 pm
பாலியல் வல்லுறவு, ஆபாச வீடியோ வைத்திருந்தத கல்லூரி மாணவர் மீது நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டது
August 11, 2026, 2:33 pm
அரச குடும்பம் தொடர்பான தவறான பதிவு: சமூக ஆர்வலர் செஷன்ஸ் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டார்
August 11, 2026, 12:53 pm
