செய்திகள் மலேசியா
போதைப்பொருள் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட மலேசிய விமானியின் உடமைகளைச் சோதிப்பதில் ஏகேபிஎஸ்-க்கு எந்தப் பங்கும் இல்லை: ஷுஹாய்லி
சிப்பாங்:
போதைப்பொருள் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட மலேசிய விமானியின் உடமைகளைச் சோதிப்பதில் ஏகேபிஎஸ்-க்கு எந்தப் பங்கும் இல்லை.
எல்லைக் கட்டுப்பாடு, பாதுகாப்பு முகமையின் (ஏகேபிஎஸ்) தலைமை இயக்குநர் டத்தோஸ்ரீ முகமது ஷுஹாய்லி முகமது ஜைனை இதனை கூறினார்.
கடந்த வாரம் இந்தோனேசியாவில் கைது செய்யப்பட்ட மலேசிய விமானியின் உடமை ஸ்கேனரைக் கொண்டு சோதனை செய்யும் பணி, மலேசியா ஏர்போர்ட்ஸ் நிறுவனத்தால் முழுமையாக மேற்பார்வையிடப்பட்டது.
கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தில் நடைபெற்ற இந்தச் சோதனை செயல்முறை, மலேசியா ஏர்போர்ட்ஸ் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள விமானப் பாதுகாப்புக் குழு அதிகாரிகளின் மேற்பார்வையில் மேற்கொள்ளப்பட்டது.
சம்பந்தப்பட்ட விமானியின் உடமைகளைச் சோதிப்பதில் ஏகேபிஎஸ்க்கு எந்தப் பங்கும் இல்லை என்பதை இது தெளிவாகக் காட்டுகிறது.
உண்மைதான், கேஎல்ஐஏவில் உள்ள ஸ்கேனிங் இயந்திரம் மூலமான பரிசோதனையில், ராயல் மலேசியன் கஸ்டம்ஸ் அதிகாரிகள் ஈடுபடவில்லை என்பதை நான் உறுதிப்படுத்துகிறேன்.
பயணப் பெட்டிகளை ஸ்கேனிங் செய்யும் இயந்திரம் மூலமான பரிசோதனையை மற்ற தரப்பினரால் நடத்தியது என்று அவர் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
August 3, 2026, 12:08 pm
தேசிய முன்னணி, நம்பிக்கை கூட்டணி ஒத்துழைப்பை பிரதமர் முடிவுக்குக் கொண்டுவர வேண்டும்: புவாட்
August 3, 2026, 12:05 pm
இருதய அறுவை சிகிச்சைக்கு முன் துணைப் பிரதமர் ஃபாடிலாவின் உடல்நிலை சீராக உள்ளது
August 3, 2026, 11:59 am
