செய்திகள் மலேசியா
கிலேனலி தோட்டத்தமிழ்ப்பள்ளியின் 43 ஆண்டு போட்டி விளையாட்டு உலக கிண்ணம் கால்பந்து பாணியில் சிறப்பாக நடந்தேறியது.
பாரிட்:
மத்திய பேராக் மாவட்டத்தில் அமைந்துள்ள கிலேனலி தோட்டத்தமிழ்ப்பள்ளியின் விளையாட்டு போட்டி மிகவும் சிறப்பாக, அண்மையில் நடந்து முடிந்த உலக கிண்ண கால்பந்து போட்டியின் பாணியில் நடந்தேறியது.

இப்பள்ளியில் 18 மாணவர்கள் மட்டுமே படித்தாலும், இப்பள்ளியின் தலைமையாசிரியர் கலையரசு மற்றும் இதர ஆசிரியர்கள் சிறந்த ஏற்பாடினை செயதனர் என்றால் மிகையாகாது.
அண்மையில் நடந்து முடிந்த உலக கிண்ண கால்பந்து போட்டியின் பாணியில் இம்முறை இப்பள்ளி மிகவும் சிறந்த ஏற்பாட்டினை செய்து முடித்தனர். குறிப்பாக, மாணவர்களை ஸ்பெயின், பிரேஜில் மற்றும் அர்ஜென்டினா என்று மூன்று குழுவாக பிரிக்கப்பட்டு விளையாடினர். இக்குழுக்களின் ஜெர்சியை அணிந்தவாறு மாணவர்கள் பங்கேற்றது மிகவும் சிறந்த கட்டமைப்பு கொண்ட படைப்பாக அமைந்தது.
இந்த போட்டி விளையாட்டை கிலெனலி தோட்ட நிர்வாகி துவான் அமாட் முஹாடிப் அபதுல் ஹாலிம் தொடக்கி வைத்தார். அத்துடன், இந்நிகழ்வின் நிறைவு விழாவை எம். விந்தைக்குமரன், தமிழ்ப்பள்ளிகளின் ஆதரவு குழுவினர் நிறைவு செய்தார்.
இந்தப்பள்ளியின் வளர்ச்சிக்கும் மேம்பாட்டிற்கும் இப்பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் சங்கமும், பள்ளி மேலாளர் வாரியமும் பெரும் பங்காற்றி வருவதாக பள்ளித்தலைமையாசிரியர் அவர்களை பாராட்டினார். இவர்களின் இச்சேவைக்கு நன்றி கூறும் வகையில் இவர்கள் அனைவரும் இப்போட்டி விளையாட்டில் சிறப்பிக்கப்பட்டனர்.
இப்போட்டி விளையாட்டில் சிறப்பு பிரமுகர்களாக, வழக்கறிஞர் தி. இளங்கோவன், மத்திய பேராக் மாவட்டகல்வி இலாகா துணை அதிகாரி துவான் முகமட் ஹத்தா அட்னான், பேராக் தமிழ்ப்பள்ளிகளின் தலைமையாசிரியர் மன்ற தலைவர் ஜெயகுமார், தமிழ்ப்பள்ளி ஆசிரியர்களின் கூட்டுறவு கழக தலைவர் சி. விஜயன் மற்றும் தலைமையாசிரியரா்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள், முன்னாள் மாணவர்கள் கலந்து சிறப்பித்தனர்.
-இரா. கிருஷ்ணன் - பாலசந்தர்
தொடர்புடைய செய்திகள்
August 3, 2026, 12:08 pm
தேசிய முன்னணி, நம்பிக்கை கூட்டணி ஒத்துழைப்பை பிரதமர் முடிவுக்குக் கொண்டுவர வேண்டும்: புவாட்
August 3, 2026, 12:05 pm
இருதய அறுவை சிகிச்சைக்கு முன் துணைப் பிரதமர் ஃபாடிலாவின் உடல்நிலை சீராக உள்ளது
August 3, 2026, 11:59 am
தெலுக் இந்தான் மணல் மேடு ஸ்ரீ மகா காளியம்மன் ஆலயத்தில் பக்தி வெள்ளத்தில் நடைபெற்ற தீச்சட்டி உற்சவம்
August 3, 2026, 11:50 am
சோலார் ஊழல் குற்றத்தீர்ப்பு மேல்முறையீட்டில் புதிய சான்றுகளைச் சமர்ப்பிக்க ரோஸ்மா அனுமதி கோரினார்
August 3, 2026, 11:42 am
