செய்திகள் மலேசியா
அலட்சியமாக வாகனம் ஓட்டி 3 பேர் உயிரிழக்கக் காரணமாக இருந்ததாக தொழில்நுட்ப வல்லுநர் மீது குற்றம் சாட்டப்பட்டது
பெட்டாலிங் ஜெயா:
அபாயகரமான முறையில் வாகனத்தை செலுத்தி மரணத்தை விளைவித்ததாக சந்தேகிக்கப்படும் தொழில்நுட்ப வல்லுநர் மீது இங்குள்ள பெக்கான் மாஜிஸ்டிரெட் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டது.
இருப்பினும் குற்றஞ்சாட்டப்பட்ட 31 வயதான சையத் முஹம்மத் இஸ்ஸார் அய்மான் சையத் அஹ்மத் தனக்கு எதிரான குற்றத்தை மறுத்து விசாரணை கோரினார்.
குற்றச்சாட்டில் நான்கு சக்கர இயக்கி கொண்ட இசுசு டி-மேக்ஸ் வாகனத்தை அஜாக்கிரதையாக ஓட்டியதால், 33 வயதான முகமது ஜெக்ரி ஜுஹைரி முகமது அட்டான், அவரது 2 வயதான மகள் தியா சோபியா மற்றும் மற்றொரு ஓட்டுநரான 46 வயதான அஸஹருதீன் முகமது அலி ஆகியோர் உயிரிழந்தனர்.
ஜூன் 19 அன்று பெக்கானில் உள்ள ஜாலான் குவாந்தான் - சிகாமாட்டில் மாலை 5 மணியளவில் அவர் இந்த குற்றத்தைப் புரிந்தார்.
குற்றஞ்சாட்டப்பட்ட சந்தேக நபர் 1987 சாலை போக்குவரத்து சட்டத்தின் செக்ஷன் 41(1) இன் கீழ் குற்றஞ்சாட்டப்பட்டார்
குற்றம் நிரூபிக்கப்பட்டால் 10 ஆண்டுகளுக்கு மேற்போகாத சிறை, 20 ஆயிரம் ரிங்கிட் முதல் 50 ஆயிரம் ரிங்கிட் வரை அபராதம் விதிக்கப்படும்.
இந்த வழக்கை மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ள செப்டம்பர் 18 ஆம் தேதியை நீதிமன்றம் நிர்ணயித்தது.
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
August 3, 2026, 12:08 pm
தேசிய முன்னணி, நம்பிக்கை கூட்டணி ஒத்துழைப்பை பிரதமர் முடிவுக்குக் கொண்டுவர வேண்டும்: புவாட்
August 3, 2026, 12:05 pm
இருதய அறுவை சிகிச்சைக்கு முன் துணைப் பிரதமர் ஃபாடிலாவின் உடல்நிலை சீராக உள்ளது
August 3, 2026, 11:59 am
தெலுக் இந்தான் மணல் மேடு ஸ்ரீ மகா காளியம்மன் ஆலயத்தில் பக்தி வெள்ளத்தில் நடைபெற்ற தீச்சட்டி உற்சவம்
August 3, 2026, 11:50 am
சோலார் ஊழல் குற்றத்தீர்ப்பு மேல்முறையீட்டில் புதிய சான்றுகளைச் சமர்ப்பிக்க ரோஸ்மா அனுமதி கோரினார்
August 3, 2026, 11:42 am
சுங்கை பூலோ இளையோருக்கு 10,000 இலவச சைக்கிள்கள்; ஆரோக்கியமான தலைமுறையை உருவாக்கும்: டத்தோஸ்ரீ ரமணன்
August 3, 2026, 11:02 am
