நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

இருதய அறுவை சிகிச்சைக்கு முன் துணைப் பிரதமர் ஃபாடிலாவின் உடல்நிலை சீராக உள்ளது

கோலாலம்பூர்:

மருத்துவ நிபுணர்கள் குழுவின் ஆலோசனையின் பேரில், துணைப் பிரதமர் ஃபாடிலா யூசுப் விரைவில் தேசிய இருதய நிறுவனத்தில் இருதய பைபாஸ் அறுவை சிகிச்சையை மேற்கொள்ள உள்ளார்.

துணைப் பிரதமரின் பத்திரிகைச் செயலாளர் மிசியா தாயிப், இன்று ஒரு அறிக்கையில் இதை தெரிவித்தார்.

எரிசக்தி மாற்றம், நீர் உருமாற்றத் துறை அமைச்சராகவும் இருக்கும் ஃபாடிலாவின் உடல்நிலை சீராக இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இருப்பினும், சிகிச்சை, குணமடைதல் செயல்முறை சீராக நடைபெறுவதை உறுதி செய்வதற்காக, அவர் முழுமையாக ஓய்வெடுக்கவும், பார்வையாளர்களைச் சந்திக்க வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளார் என அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset